ஆதார் கார்டை இணைத்தவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசா.? 5 ஆயிரம் கொடுங்க - செல்லூர் ராஜு கேள்வி

By Raghupati R  |  First Published Dec 18, 2022, 9:33 PM IST

திமுக அரசு சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழர்களின் விழாவான பொங்கல் விழாவிற்கு திமுக ஏற்கனவே சொன்னது போலவே  5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.


முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அவர் பேசிய போது, தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையை செம்மைப்படுத்த வேண்டும். சரியான முறையில் ஒழுங்காக ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். பொருட்கள் விநியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க..2024 டார்கெட்! ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்.. அப்போ திமுக + காங்கிரஸ் + மநீம கூட்டணி கன்ஃபார்ம்!

ஆனால் எங்கள் ஆட்சியில் தரமான பொருட்களை, முறையாக விநியோகம் செய்துள்ளோம். மேலும்,  மூத்த குடிமக்கள் பொருட்கள் வாங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. கைரேகை பதிவதில் தாமதம் ஏற்படுவதால்  பொருட்கள் பிறகு தருவதாகக் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். திமுக அரசு சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை.

தமிழர்களின் விழாவான பொங்கல் விழாவிற்கு திமுக ஏற்கனவே சொன்னது போலவே  5 ஆயிரம் வழங்க வேண்டும். ஆதார் கார்டை இணைத்தவர்களுக்கு மட்டும் தான் பொங்கல் பரிசு என்று சொல்லாமல் எல்லோருக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும். அதற்கு பின்னர் தான் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பேசினார் செல்லூர் ராஜு.

இதையும் படிங்க..சொத்து பட்டியலை வெளியிட தயார்! வேலியில் போகிற ஓணானை.. அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

click me!