" பல்லியோடு சேர்த்து பொங்கல் பரிசு 22 பொருட்கள் "... இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம் நடக்கிறது. எச்.ராஜா

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2022, 2:57 PM IST
Highlights

இந்த ஆட்சியில் இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம் நடக்கிறது. இந்து மத கலாசாரத்தில் மட்டுமே பெண்கள் தெய்வங்கள். பன்றியோடு சேர்ந்த கன்று போல கேஎஸ் அழகிரி என்ற கன்று தற்போது மாறிவிட்டது.

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு பல்லியோடு சேர்த்து மொத்த 22 பொருட்களை வழங்கியது என்றும், கொலை பாதகத்திற்கு அஞ்சாத அரசுதான் இந்த அரசு என்றும் எச்.ராஜா திமுகவை விமர்சித்துள்ளார். தற்கொலை செய்து இறந்த மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை , மதமாற்ற தடைச் சட்டம் உள்ளிட்ட 4 கோரிக்கையை வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம்

நடைபெற்ற நிலையில் எச்.ராஜா இவ்வாறு விமர்சித்தார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விடுதிக் காப்பாளர் கொடுத்த மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டு இறந்த பள்ளி மாணவி லாவண்யா , மதமாற்றத்திற்காக கட்டாயப்படுத்தப்படதாலே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டி பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான இந்த போராட்டத்தில் எச்.ராஜா ,  பொன்.ராதாகிருஷ்ணன் , சி.பி.ராதாகிருஷ்ணன் , நயினார் நாகேந்திரன் , வி.பி.துரைசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் 300 க்கும் மேற்பட்ட தொண்டர்களும் பங்கேற்றனர். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு: 

எந்த மதம் , பள்ளிக்கும் எதிராக போராடவில்லை , இறந்த மாணவி தொடர்பாக  மத சாயம் நாங்கள் பூசவில்லை. அதிகாரம் இருந்தால் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக  தடை சட்டம் கொண்டு வருவதே  எனது முதல் பணி என காந்தி 1935 ல் சொன்னார். கடந்த 8மாதத்தில் நாங்கள் உணர்ந்தது திமுக  மத சார்பற்ற அரசு கிடையாது , 160 க்கும் மேலான இந்துக் கோயில் இடிப்பு.  ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்தை மட்டும் இடித்து , மத அரசியல் மூலம் குளிர் காய்கிறது திமுக. மாணவர்கள் சாவு என்றாலே அரசியல் செய்வதற்கான வாய்ப்பு என தமிழகத்தில் கருதுகின்றனர். 

லாவண்யாவுக்காக போராடாவிட்டால் துரோகமாக மாறி விடும். பாஜக சார்பில் 4 கோரிக்கைகளை முன்வைக்கிறோம் , இழப்பீடாக மாணவி குடும்பத்தாருக்கு 1 கோடி வழங்க வேண்டும் , 2 ஆண்டுகளாக அந்த மாணவி மதமாற்ற நிர்பந்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் , அவரது மரணம் தொடர்பாக  சிபிஐ விசாரணை மூலம் அனைவருக்கும் தண்டன வழங்க வேண்டும், மதசார்பின்மையை கைவிட்டு ஒரு மதத்தை மட்டும் நம்பி செயல்படுகிறது திமுக எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டம்  கொண்டுவர வேண்டும், குடும்பத்தாருக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். உண்மையை பார்க்காதே , பேசாதே , கேட்காதே என திமுக அரசு நடந்து கொள்கிறது. திமுக மத , பிண அரசியல் செய்யக்கூடாது " 

ஹெச்.ராஜா பேச்சு: 

கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கலைராஜா , பல்கலைக்கழக வளாகத்தில்  தி.க கூட்டம்  நடத்தினார். பாம்பு வெளியில் வந்தால்தான் அடித்து கொல்ல முடியும் , தற்போது ஒவ்வொருவராக வெளியில் வர தொங்கியுள்ளனர். காஞ்சிபுரம் ஆண்டர்சன் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு திருநீரு , ருத்திராட்சம் அணிந்ததை ரவுடி போல இருப்பதாக கூறி இரண்டு மாணவர்களை  அவமதித்துள்ளார் பள்ளி ஆசிரியர். ஆண்கள் பேண்ட் , பெண்கள்  பாவாடை கட்டுவார்கள் , பேண்ட்டுக்கு மேல் பாவாடை கட்டுவது சரியாக இருக்குமா என இந்துக்கள் கேட்கின்றனர். 

லாவண்யா மரணத்திற்கு டிஜிபி உட்பட அனைவரும் பொறுப்பு . இந்திய நாட்டு அடையாளம் இந்துத்துவா என்று உச்ச நீதிமன்றமே சொல்லலிவிட்டது , சேகர்பாபு , ஸ்நேக் பாபு யாரும் சட்டமே படிப்பதில்லை.  CSI meeting -ல் உங்கள் அரசு என சொன்னார் மாண்புமிகு முதல்வர் , இந்த ஆட்சியில் இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம் நடக்கிறது. இந்து மத கலாசாரத்தில் மட்டுமே பெண்கள் தெய்வங்கள். பன்றியோடு சேர்ந்த கன்று போல கேஎஸ் அழகிரி என்ற கன்று தற்போது மாறிவிட்டது. திருமாவளவனுக்கு ஆதரவாக சனாதன தர்மத்தை அழிக்கவுள்ளதாக அழகிரி கூறியதை மொழிபெயர்த்து தேர்தல் நடைபெற உள்ள உத்தரகாண்ட் , உத்தரபிரதேசத்துக்கு அனுப்பியுள்ளோம். காங்கிரசை குழி தோண்டி புதைக்க கிடைத்த நல்ல மனிதர் அழகிரி. 

மத்திய பிரதேஷ் , ஒரிசா , அருணாசலம் , கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமலில் இருக்கிறது. மண்டைக்காடு கலவரத்தில் பல இந்து பெண்களை மீன் தூண்டிலை வீசிக் கொன்றார்கள். கலவரம் தொடர்பாக விசாரித்த வேணுகோபால் ஆணையமே மதமாற்ற தடை சட்டத்தை பரிந்துரைத்தது. மக்கு மந்திரி , நிதி அமைச்சர் என்னை பிகாரி என்கிறார் . என் தாத்தா பெயர் சிதம்பரம் , நான் எப்படி பிகாரி ஆவேன். மணப்பாறையில் ஆழ்துளை யில் விழுந்து இறந்த குழந்தை கிறிஸ்தவ குழந்தை என்பதால் பணம் கொடுத்தனர் , அரியலூர் குழந்தை இந்து என்பதால் யாரும் ஏதும் தரவில்லை. 

பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லியோடு சேர்த்து 22 பொருள்கள் இருந்தன.கொலை பாதகத்திற்கு அஞ்சாத அரசு இது.  திருத்தணி குப்புசாமி மரணம் அதைத்தான் காட்டுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் கலப்படமே  இல்லை என அமைச்சர் சொல்கிறார் , முதல்வர் தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் , இதில் எந்த வாய் நல்ல வாய்..? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு குட் பை சொல்ல வேண்டும் "
 

click me!