மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சொகுசு கப்பல்… புதுச்சேரி அரசு அனுமதிக்காது… தமிழிசை அதிரடி!!

Published : Jun 06, 2022, 09:07 PM IST
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சொகுசு கப்பல்… புதுச்சேரி அரசு அனுமதிக்காது… தமிழிசை அதிரடி!!

சுருக்கம்

சென்னை - புதுச்சேரி இடையேயான சொகுசு கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில் அது குறித்த புதுவை ஆளுநர் தமிழிசையின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை - புதுச்சேரி இடையேயான சொகுசு கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில் அது குறித்த புதுவை ஆளுநர் தமிழிசையின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரியில் தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் கடற்படைப் பிரிவு மாணவர்களின், கடல் சாகசப் பயணம் இன்று தொடங்கியது. புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொடங்கிய மாணவர்கள் கடல் சாகசப் படகு பயணத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கடல் சாகசப் பயணத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள், கடல் பயணம் செல்வது மட்டுமல்லாமல், கடல்கரையோர கிராமங்களில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரத்த தான முகாமில் கலந்துகொள்ளுதல், மரங்கள் நடுதல், கடற்கரையை தூய்மைப்படுத்துதல், விழிப்புணர்வு பேரணிகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்களில் ஈடுபட உள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தக் கடல் பயணக்குழவில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்வதும் மகிழ்ச்சி. அவர்கள் பிற பெண்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர். 20 நாட்களுக்கும் மேலாக, 25 பெண்கள் கடற்பயணம் செய்யும்போது, பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிக பாதுகாப்பும் தேவைப்படும். மாணவர்களுக்கு நமது கடற்படை, உறுதுணையாக உள்ளது. குடியரசு தினத்தில் பிரதமரின் கரங்களால் வழங்கப்படும் சிறந்த அணிவகுப்பிற்கான கோப்பையை, புதுச்சேரி கடற்படைப் பிரிவு பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. புதுச்சேரியில் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், கடந்த சில தினங்களாக பொது இடங்களில், பல லட்சம் எண்ணிக்கையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக இருக்கிறது.

சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் சூழலில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். அது தொடர்பாகவும், இந்த மாணவர்கள் குழு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது, சென்னை-புதுச்சேரி இடையே சொகுசு சுற்றுலா கப்பல் ஒன்று இயக்கப்படுவது குறித்தும், அதில் சூதாட்டம் போன்ற கலாசார நிகழ்வுகள் நடப்பதாக புகார் எழுவது குறித்தும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழிசை, அது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு எந்த தகவலும் இல்லை. அதுதொடர்பாக கோப்பும் வரவில்லை. அப்படியே கப்பல் புதுச்சேரிக்கு வந்தாலும், கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!