‘அப்படியொரு குறுக்கு புத்தி எங்களுக்கில்ல’... பாஜக, என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 23, 2021, 2:59 PM IST
Highlights

நாராயணசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 3 திமுக எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவுடன் 2016ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரும், திமுக எம்.எல்.ஏ. ஒருவரும் அடுத்தடுத்து பதவி விலகியதால், புதுச்சேரி பதஅங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. நியமன எம்எல்ஏக்களுடன் சேர்த்து எதிர்க்கட்சிகளின் பலமும் 14 ஆக இருந்ததால் பெரும்பான்மையை நியமிக்கும் படி நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். 

இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியதோடு, நியமன எம்.எல்.ஏ.க்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், நாராயணசாமியின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்த நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தனர். 

நாராயணசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நமச்சிவாயம் முதலமைச்சராக பொறுப்பேற்க புது அமைச்சரவை விரைவில் பதவியேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் நாங்கள் செல்ல மாட்டோம் என அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க திமுக முயற்சிக்காது என்றும், புதுச்சேரியில் அதிமுக ஆட்சி கவிழ அதிமுக காரணமல்ல நாராயணசாமி தான் காரணம் என்றும் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

click me!