தமிழகத்தில் பி.ஜே.பி 30 தொகுதிகளில் வெற்றி பெறும்... பொன்னார் தில் பேட்டி

By sathish kFirst Published Dec 26, 2018, 8:23 PM IST
Highlights

மதுரையில் உருவாக இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தே ஆகவேண்டும்! என்று  முரண்டு பிடிக்க துவங்கியிருக்கிறது அ.தி.மு.க

மதுரையில் உருவாக இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தே ஆகவேண்டும்! என்று  முரண்டு பிடிக்க துவங்கியிருக்கிறது அ.தி.மு.க.: செய்தி. 
(சர்தான், தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸை அறிவிக்கவே இம்பூட்டு  காலம் எடுத்தாய்ங்க. இப்ப இப்படி ஒரு சிக்கலை உருவாக்குறீங்களா, வெளங்கிடும்.)

*    ரஜினி துவங்க இருக்கும் சேனல் வெறும் நியூஸ் சேனலாக இருக்கும்! இல்லையில்லை அது ஜனரஞ்சக சேனலாக இருக்கும்! இல்லவேயில்ல ரெண்டும் கலந்ததா இருக்கும்! என்று பெரிய பட்டிமன்றமே கோடம்பாக்கம் மற்றும் கோட்டையில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்: செய்தி. 
(இது மட்டும் தலைவனின் காதுகளுக்கு போனா ‘ஹ்ஹா! நான் இன்னும் சேனலே துவக்கல. அதுக்குள்ளே விவாதமா, அப்டியே தல சுத்துது!’ன்னு மெர்சலாகியிருப்பார்ல)

*    தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு, கைது என்று தனக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்தபோது தனது நெருங்கிய நண்பர்களான பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் போன்றோர் தன்னுடன் நிற்காமல் போனதில் விஷாலுக்கு ஏகப்பட்ட வருத்தமாம்!: செய்தி
(தல இதுக்கே வருத்தப்பட்டா எப்டி? இனி தேர்தல் தேர்தலா நிக்கப்போறீங்க நீங்க. உங்க நிழலே உங்கள விட்டு சில நேரம் எஸ்கேப் ஆகிடும். சுய தைரியம் முக்கியம் டியர் சண்டக்கோழி!)

*    மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்: திருநாவுக்கரசர்.
(தல! புரியுது, புரியுது. ஆக தமிழ்நாட்டின் அத்தனை தொகுதிகளுக்கும் போயி ‘நான் தான் தமிழக காங்கிரஸின் தலைவர். இன்னும் ஆள மாத்தல, மாத்தல’ன்னு இந்த சாக்குல சொல்லப்போறீங்க. அப்டித்தானே?)

*    வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பி.ஜே.பி. கூட்டணி முப்பது தொகுதிகளில் வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷணன். 
(தலைவரே எந்திரிங்க, வள்ளியூர் ரயில்வே ஸ்டேஷன் வந்துடுச்சு. அடுத்து நாகர்கோயில்தான். சட்டுப்புட்டுன்னு  லக்கேஜை தூக்கி வையுங்க.)

click me!