தன்னை ஒதுக்கிவிட்டதால் விரக்தியில் உளறும் பொன்.ராதாகிருஷ்ணன்... கிழித்து தொங்கவிடும் அதிமுக அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Oct 9, 2020, 5:12 PM IST
Highlights

பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளிக்கையில்;- கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்க வேண்டிய விஷயம். தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாஜவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம். 

மேலும், தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கக்கூடிய ஆட்சி அமையும். அது அதிமுகவாக இருக்கலாம், திமுகவாக இருக்கலாம் என்றார். இவரது இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியது. ஏற்கனவே பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் பேட்டியளிக்கையில்;- பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். தமிழக அரசின் செயல்பாடுகளை மாநில பாஜக தலைவர் எல்.முருகன் பாராட்டியுள்ளார். அதிகாரத்தில் இருந்த போது திமுகவினர் எதையும் செய்யாமல் தற்போது அரசியலுக்காக பேசுகின்றனர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

click me!