இரும்பு ஸ்கேலால் மாணவனை அடித்தே கொன்ற வாத்தியார்: அரசியல் பலத்தை காட்டி பெற்றோர்களை மிரட்டிய தலைமை ஆசிரியர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 9, 2020, 4:40 PM IST
Highlights

இதையடுத்து கார்த்திக்கின் பெற்றோர் அலைபேசி மூலம் பள்ளியை தொடர்புக்கொண்டு பேசியதில் பள்ளி தலைமை ஆசிரியர் எனக்கு அமைச்சர் வரை ஆட்கள் தெறியும் உங்களால் முடிந்ததை பாருங்கள் என சொல்லி அலைபேசியை துண்டித்துள்ளார். 

இரும்பு ஸ்கேலாலேயே மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்..!! அரசியல் பலத்தை காட்டி பெற்றோர்களை மிரட்டும் தலைமை ஆசிரியர். அரசு பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவர்  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை அடுத்த பள்ளிகரணை, மல்லேஸ்வரிநகர் பகுதியில் வசிப்பவர் வேலு இவரது மகன் கார்த்திக் (14) இவர் மேடவாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார், இவர் கடந்த மாதம் (பிப்ரவரி) 6-ஆம் தேதி வகுப்பறையில் அவரது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார், 

வகுப்பு நேரத்தில் விளையாடுகிறீர்களா? என சக மாணவர்களையும் கார்திக்கையும் தமிழ் வகுப்பு ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் கண்மூடி தனமாக அடித்துள்ளார். இதில் சில மாணவர்களுக்கு கை, மற்றும் தோல் பகுதியில் சிறிய வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன, கார்த்தி என்ற மாணவருக்கு மட்டும் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது, வீட்டுக்கு சென்ற கார்த்திக் பெற்றோரிடம் தெறிவிக்காமல் சாதரணமாக இருந்து வந்துள்ளார், கார்த்திக்குடன் விளையாடி அடிவாங்கிய மாணவர் ஒருவருக்கு கையில் வெட்டுகாயங்கள் இருந்ததை அவரின் பெற்றோர் கவணித்து பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்த போதுதான் மாணவர் கார்த்திக்கின் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டிருப்பது கார்த்திக்கின் பெற்றோர்க்கு தெறியவந்தது. 

இதையடுத்து கார்த்திக்கின் பெற்றோர் அலைபேசி மூலம் பள்ளியை தொடர்புக்கொண்டு பேசியதில் பள்ளி தலைமை ஆசிரியர் எனக்கு அமைச்சர் வரை ஆட்கள் தெறியும் உங்களால் முடிந்ததை பாருங்கள் என சொல்லி அலைபேசியை துண்டித்துள்ளார். இதையடுத்து கார்த்திக்கின் பெற்றோர் கார்த்திக்கை சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர், அதில் கார்த்திக்கின் பின் தலையில் உள்ள கண்ணுக்கு செல்லக்கூடிய நரம்பு பாதித்து இருப்பதாக மருத்துவர்கள் தெறிவித்துள்ளனர், நாளுக்கு நாள் கார்த்திக்கின் இடது கண் பார்வை மங்க ஆரம்பித்துள்ளது. இதனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கார்த்திக்கு உடனடியாக அருவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெறிவித்துள்ளனர். அருவை சிகிச்சை செய்து முடித்தும் கார்த்திக்கின் இடது கண் பார்வை முற்றிலும் தெறியாமல் போனது. மேலும் நரம்பு சம்பந்தமான தீவிர சிகிச்சைப் பிரிவில்  கார்த்திக் அனுதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்துள்ளார், 

 

இந்நிலையில் மருத்துவர் கார்த்திக்கு புற்றுநோய் இருப்பதாகவும், தலையில் அடிப்பட்டதால் மூளை நரம்புகள் துண்டிக்கப்பட்டு கண் வழியே இரத்தம் வந்துக்கொண்டிருப்பதாகவும், டியூப் மூலம் இரத்தங்களை வெளியேற்றி வருவதாகவூம் தெறிவித்துள்ளனர். கொரோனா சென்னையில் உச்சம் தொட்டிருந்த நேரத்தில் கார்த்திக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது என தெறிவித்ததால் கார்த்திக்கின் பெற்றோர்கள் கார்த்திக்கை வீட்டிற்க்கு அழைத்து சென்றுள்ளனர், வீட்டில் படுக்கையில் இருந்த கார்த்திக் இன்று காலை படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார், மேடவாக்கம் பள்ளி ஆசிரியர் கார்த்திக்கின் தலையில் அடித்ததால் தான் கார்த்திக் மரணமடைந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விசாரித்த போது எந்த ஒரு தகவலையும் கூற பள்ளி ஆசிரியர்கள் மறுக்கின்றனர். 

 

click me!