புரோட்டா சாப்பிட்டால் பணம் கொடுப்பதில்லை... கல்லாவில் காசு எடுத்திட்டு போறாங்க... பொன்னர் கவலை!!

By sathish kFirst Published Apr 19, 2019, 10:58 AM IST
Highlights

கடந்த சில மாதமாக புரோட்டா சாப்பிட்டால் பணம் கொடுப்பதில்லை மட்டுமல்ல, கல்லாவில் இருக்கும் பணத்தை எடுத்து செல்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

கடந்த சில மாதமாக புரோட்டா சாப்பிட்டால் பணம் கொடுப்பதில்லை மட்டுமல்ல, கல்லாவில் இருக்கும் பணத்தை எடுத்து செல்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திமுக, வினரால் தாக்கப்பட்ட பிஜேபி தொண்டர்களை பார்த்து ஆறுதல் கூறிய பின்  அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; கன்னியாகுமரி தொகுதியில் கடந்த காலங்களில் தேர்தலில் அரசியல் போட்டி இருந்தது. ஓட்டுச்சாவடியை கைபற்றுவது போன்ற சம்பவங்கள் இங்கு நடந்தது இல்லை. துரதிர்ஷ்டவசமாக திமுக கூலிப்படையினர் அருமநல்லூர் பகுதியில் வீரவநல்லூர் பிஜேபி தொண்டர்களை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

பிஜேபிக்கு ஓட்டு போட்டேன் என்று சொன்னதற்காக ஆரல்வாய்மொழியில் சுப்பையா என்பவரை தாக்கியுள்ளனர். மிருகத்தனமான தாக்குதல் நடத்தி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். திமுகவினர் கடந்த சில மாதமாக புரோட்டா சாப்பிட்டால் பணம் கொடுப்பதில்லை மட்டுமல்ல, கல்லாவில் இருக்கும் பணத்தை எடுத்து செல்கின்றனர் இதை ஊடகங்கள் காட்டியுள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை பார்த்து அரசியல் ஆதாயம் தேடும் செயலில் திமுக, தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டார். இதை விட ஒரு அவமானம் அரசியல் கட்சி தலைவருக்கு இருக்க முடியாது, இது மகா மட்டரகமான அரசியல் என்றார்.

மேலும், இந்த நிலை மாற வேண்டுமெனில் தமிழக மக்கள் திமுகவை பயங்கரவாத இயக்கமாக பார்த்து புறந்தள்ள வேண்டும். தேர்தல் முடிந்தாலும் ஆட்சியை பிடிக்கணும், உள்ளாட்சியை பிடிக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். ஆனால், திமுகவின் இந்த கனவை தகர்த்து எறிய வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.

click me!