பொன்.ராதாவா? பொரி உருண்டையா? விக்கிபீடியாவில் பெயர் மாற்றத்தால் எழுந்த சர்ச்சை..!

Asianet News Tamil  
Published : Oct 23, 2017, 03:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
பொன்.ராதாவா? பொரி உருண்டையா? விக்கிபீடியாவில் பெயர் மாற்றத்தால் எழுந்த சர்ச்சை..!

சுருக்கம்

pon radha wikipedia issue

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பெயரை விக்கிபீடியாவின் ஆங்கில பக்கத்தில் பொரி உருண்டை என குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தமிழகத்தில் பாஜக மீதான வெறுப்பலைகளை பாஜக வெறுப்பாளர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர். 

நீட் தேர்வு, இந்தி திணிப்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள், பாஜகவை எதிர்த்து அரசியல் செய்துவருகின்றன. பொதுமக்கள் மத்தியிலும் சில விவகாரங்களில் பாஜக மீது அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்திகளை சிலர் தகாத முறைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள வசனங்களை நீக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலங்களவை எம்.பி இல.கணேசன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகிய தலைவர்கள் வலியுறுத்தினர். 

இந்த விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், சினிமா ரசிகர்கள் என ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும் பாஜக தலைவர்கள் ஆளாகினர்.

இந்நிலையில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பெயரை விக்கிபீடியாவின் ஆங்கில பக்கத்தில் யாரோ பொரி உருண்டை என பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் இந்த தகவல் அறியப்பட்ட சில நிமிடங்களிலேயே பொரி உருண்டை என்பது பொன்.ராதாகிருஷ்ணன் என மாற்றப்பட்டது.
 

PREV
click me!

Recommended Stories

மதுரையின் விஸ்வரூபம்..!சர்வதேச அந்தஸ்து வழங்கிய மத்திய அரசு - இபிஎஸ் வரவேற்பு..!
அமைச்சர் பதவி கிடைக்காது..! பி.டி.ஆரைத் தோற்கடிக்க ஸ்கெட்ச் போடும் தளபதி... திமுகவின் உள்ளடி அரசியல்..!