காசிமேடு மீனவர்கள் போராட்டத்தின் பின்னணியில் திமுக..! அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!

 
Published : Oct 23, 2017, 03:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
காசிமேடு மீனவர்கள் போராட்டத்தின் பின்னணியில் திமுக..! அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!

சுருக்கம்

minister jayakumar alleged dmk for fishermen protest

சென்னை காசிமேட்டில் நடந்த மீனவர்கள் போராட்டத்தின் பின்னனியில் திமுக இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மீன்பிடி படகுகளில் சீன எஞ்சின்கள் பொருத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீன் விற்பனைக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை காசிமேட்டில் மீனவர்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மீனவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆனாலும் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதை அடுத்து, படகுகளிலிருந்து சீன எஞ்சின்களை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மீன் விற்பனைக் கடைகளை இடம் மாற்றியதால் அந்த கடைகளில் மாமூல் வசூலித்துக் கொண்டிருந்த ரவுகளின் வருமானம் பாதிக்கப்பட்டது. எனவே மாமூல் வசூலிக்க முடியாததால், மீன் விற்கும் பெண்களையும் மீனவர்களையும் தவறாக வழிநடத்தி சிலர் போராட்டம் நடத்த தூண்டியதாகவும் இதன் பின்னணியில் திமுக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!