"இன்று மாலைக்குள் நல்ல முடிவு” - புதிர் போடும் பொன்னார்...!!

 
Published : Jul 25, 2017, 03:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
"இன்று மாலைக்குள் நல்ல முடிவு” - புதிர் போடும் பொன்னார்...!!

சுருக்கம்

pon radha talks about neet issue

நீட் தேர்வு விவகாரத்தில் இன்று மாலைக்கு நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.

இதைதொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நீட் தேர்வு விவகாரத்தில் இன்று மாலைக்கு நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!