முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் மோடி ஆட்சியை மெச்சியிருப்பாராம் !! பொன்னார்தான் சொல்கிறார் !!!

Asianet News Tamil  
Published : Oct 30, 2017, 10:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் மோடி ஆட்சியை மெச்சியிருப்பாராம் !! பொன்னார்தான் சொல்கிறார் !!!

சுருக்கம்

pon radha krishnan press meet abput pasumpon thevar

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இன்று உயிருடன் இருந்திந்தால் பிரதமர் மோடியின் நல்லாட்சியை வெகுவாக புகழ்ந்து பாராட்டியிருப்பார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 110 ஆவது குரு பூஜைவிழா, இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் விழா நடைபெற்று வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்இ அமைச்சர்கள் எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும், ஆயிரக்கணக்கான பொது மக்களும் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இன்று உயிருடன் இருந்திந்தால் பிரதமர் மோடியின் நல்லாட்சியை வெகுவாக புகழ்ந்து பாராட்டியிருப்பார் என்று தெரிவித்தார்.

ஊழலற்ற திறமையான  ஆட்சி, நேர்மையான நிர்வாகம் போன்றவற்றையே தேவர் திருமகனார் விரும்பினார் என்றும், அத்தகைய ஆட்சியை தற்போது மோடி தந்து கொண்டிருப்பதால், விண்ணுலகில் இருந்தது அவரை வாழ்த்துவார் என்றும் பொன்னார் குறிப்பிட்டார்.

நாட்டுப்பற்று மிக்க தேவரின்  சிந்தனைகள் மற்றும் எண்ணங்களை மோடி செயல்படுத்திவருவதாகவும் பொன்,ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 


 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!