பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 110 ஆவது குருபூஜை !!  எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்,  அமைச்சர்கள் மரியாதை!

Asianet News Tamil  
Published : Oct 30, 2017, 09:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 110 ஆவது குருபூஜை !!  எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்,  அமைச்சர்கள் மரியாதை!

சுருக்கம்

pasumpon thevar birthday function in ramnad

ராமநாதபுரம் மாவட்டம்  பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர்  நினைவிடத்தில் முதலமைச்சர்,  துணை முதலமைச்சர் , அமைச்சர்கள்உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கங்த் தேவரின் 110 ஆவது  குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொருவராக மலர் தூவி தேவர் சிலையை வணங்கினர். தொடர்ந்து அவர்கள் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட்டனர்


இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.வி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். குரு பூஜை விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?
Magalir Urimai Thogai: பெண்களுக்கு கிடைக்கும் ரூ.2500.! இதை மட்டும் செஞ்சா போதும் 2 மடங்கு போனஸ் உறுதி.!