
தியேட்டர்களுக்கு வெளியே பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுதை நடிகர் கமலஹாசனால் தடுத்து நிறுத்த முடியுமா என சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த தமிழக அமைச்சர்கள் கமலுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா இருந்தவரை வாயை பொத்திக் கொண்டிருந்த கமலஹாசன் இப்போது மட்டும் வாயைத் திறப்பது ஏன் என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதேபோன்று அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கமலை எதிர்த்து பேசி வருகின்றனர்.
அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஜி.கே.வாசன் போன்றோர் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கமலஹாசனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கவிண்டர்களில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்வதை கமலஹாசனால் உறுதி செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார்.
இதே போன்று தியேட்டர்களுக்கு வெளியே பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுதை நடிகர் கமலஹாசனால் தடுத்து நிறுத்த முடியுமா? என வினா தொடுத்தார்.