பொள்ளாச்சி பாலியல் வீடியோ பின்னணி... பகீர் வீடியோவை வெளியிடத் தயாராகும் டிடிவி.தினகரன்..!

Published : Apr 01, 2019, 03:22 PM ISTUpdated : Apr 01, 2019, 03:59 PM IST
பொள்ளாச்சி பாலியல் வீடியோ பின்னணி... பகீர் வீடியோவை வெளியிடத் தயாராகும்  டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளைச் செய்தவர்கள் யார் என்பதை மே 23-ம் தேதிக்குப் பிறகு ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளைச் செய்தவர்கள் யார் என்பதை மே 23-ம் தேதிக்குப் பிறகு ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் தொகுதியின் அமமுக வேட்பாளர் சாமிநாதனுக்காக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் கல்லா பெட்டிகளை ஒழிக்க அ.ம.மு.க.வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்துள்ளது. மேலும் மே 23-ம் தேதிக்கு பிறகு தற்போது மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பழையபடி சந்தையில் சர்க்கரை, வெல்லம் விற்க வந்துவிடுவார். ஏனென்றால் இந்த ஆட்சி நீடிப்பதற்கு அவருக்கே 8 சீட்டுகள் தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். 

அனைத்து அதிகாரிகளும் முதலமைச்சருக்கு ஆதரவாக வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர்,  இந்த ஆட்சி வீட்டிற்கு செல்லும் பொழுது அனைத்து அதிகாரிகளும் எங்களது மக்களவை உறுப்பினர்களின் வீட்டு வாசலில் காத்திருக்கும் நிலைமை கட்டாயம் வரும் என்றும் டிடிவி தினகரன் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பின் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் செய்யாத துரோகமே இல்லை. பணத்துக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார்கள். 

மோடியா, லேடியா என கேட்ட ஜெயலலிதாவின்  வழியில் ஆட்சி நடத்துகிறோம் எனக்கூறிக்கொண்டு, தற்போது மோடியை எங்க டாடி என்கிறார்கள் வாய் கூசாமல். இவர்கள் எல்லாம் பணம் கிடைக்கிறது என்றால், அந்த பெட்டிக்குள் கூட சென்று படுத்துக்கொள்வார்கள்.

மேலும் பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளைச் செய்தவர்கள் யார் என்பதை மே 23-ம் தேதிக்குப் பிறகு ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இந்த பொள்ளாச்சி சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் தினகரனின் இந்த தகவல் அரசியல் வட்டராத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..