ஆடிப்போய் அதிர்ந்த துரைமுருகன்... திமுகவை இடியாய் தாக்கப்போகும் ’ப்ளூ ஸ்கை’ ரெய்டு..!

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2019, 3:03 PM IST
Highlights

தனது மகனை முதன்முறையாக வேட்பாளாராக்கி தேர்தல் களத்தில் இறக்கி விட்ட திமுக பொருளாளர் துரை முருகனின் சந்தோசத்தை சல்லி சல்லியாக்கி விட்டது வருமான வரித்துறை ரெய்டு. 
 

தனது மகனை முதன்முறையாக வேட்பாளாராக்கி தேர்தல் களத்தில் இறக்கி விட்ட திமுக பொருளாளர் துரை முருகனின் சந்தோசத்தை சல்லி சல்லியாக்கி விட்டது வருமான வரித்துறை ரெய்டு. 

பேராசை பட்டு தனது மகன் கதிர் ஆனந்துக்கு மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியை பெற்றுக் கொடுத்தார் துரைமுருகன். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் களமிறங்குகிறார். களத்திலும், பண பலத்திலும் ஏ.சி.சண்முகம்ன் புகுந்து விளையாடுபவர் என்பதால் முதன் முறையாக களத்தில் இறக்கப்படும் தனது மகனை வெற்றி பெற வைத்தே ஆக வேண்டும் என துரைமுருகனும் புகுந்து விளையாட திட்டமிட்டார். தனது மகனை இந்தத் தொகுதிக்கு தத்துக் கொடுத்து விட்டதாக சென்டிமெண்ட் காட்டிய துரைமுருகன் மறுபுறம் பணத்தையும் வாரி வழங்க திட்டமிட்டார். அதிக வாக்குகளை பெற்றுத்தருபவர்களுக்கு 50 லட்சம் பரிசளிப்பதாக அறிவித்தார். 

வேலூர் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் ஐடி ரெய்டு துரைமுருகனை அதிர வைத்துள்ளது. மார்ச் 30ம் தேதி தொடங்கிய ரெய்டு அத்தோடு முடிந்து விட்டதாய் நினைத்து நிம்மதியாய் இருந்து துரைமுருகனை நேற்று இரவு வந்த வருமான வரித்துரையினர் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டனர். உள்ளே நுழையவிடாமல் அவரது ஆதரவாலர்கள் திரண்டு தடுத்தாலும், துரைமுருகன் ஆடிப்போய் விட்டார். எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு பிறரை நக்கலடிக்கும் துரைமுருகன் பதற்றத்துடன் அதிர்ந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் திகிலடைந்து இருக்கிறார்.

 

முதல்நாள் சோதனையில் பெரிதாக பணம் எதுவும் கிடைக்கவில்லை. 10 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. இன்று அதிகாலை வேலூர், காட்பாடியில் உள்ள துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டது.

அதில் வேலூர் வார்டு விவரங்கள் குறித்து எழுதிய சீட் ஒன்றும் சிக்கியது. இந்த பணம் கைப்பற்றப்பட்ட சில நிமிடங்களில் மற்றொரு டீம், வேகமாக கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் கல்லூரிக்கு படை எடுத்தனர். அடுத்து துரைமுருகனின் ஆதரவாளர்கள், உதவியாளர்கள், நெருக்கமானவர்கள் என அத்தனை ஏரியாக்களிலும் ரவுண்டு கட்டிய ஐடி அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். ஆதாரங்கள், ஆவணங்களை வைத்தே ஐந்த ஐடி ரெய்டு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறி இருப்பது துரைமுருகன் தரப்பை அதிர வைத்துள்ளது. இன்னும் எத்தனை கோடி ரூபாய் சிக்கப்போகிறதோ என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் திமுக தரப்பையும் இந்த ரெய்டு அதிர வைத்திருக்கிறது. 

திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்து முக்கியப்பொறுப்பில் இருப்பவர் துரைமுருகன். திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கும் துரைமுருகனுக்கு ‘ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? மானம் போகுது’ என இப்போது அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்த ரெய்டு இத்தோடு நிற்கப்போவதில்லை. அடுத்தடுத்து திமுக முக்கியப்புள்ளிகள் வீடுகளில் ரெய்டு நடத்த வருமான வரித்துறையினர் திட்டம் போட்டுள்ளனர். இதற்கு 'ஆபரேஷன் ஆன்டி - ப்ளூ ஸ்கை' என்று பெயர் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த லிஸ்டில் முதல் நபராக சிக்கியவர் துரைமுருகன். 

மகனை முதன்முறையாக தேர்தல் களத்தில் இறக்கிய துரைமுருகன் இப்போது கலக்கத்தில் இருக்கிறார். 
 

click me!