சேவை செய்த பிறகு அரசியலுக்கு வர வேண்டும்; இயக்குநர் மிஷ்கின்

Asianet News Tamil  
Published : Sep 24, 2017, 05:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
சேவை செய்த பிறகு அரசியலுக்கு வர வேண்டும்; இயக்குநர் மிஷ்கின்

சுருக்கம்

politics after serve Director Mishkin

10 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்த பிறகு அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம் என்றும், அரசியலுக்கு வரும் தகுதியும் ஆசையும் தனக்கில்லை என்றும் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் நூறு நாட்களில் தேர்தல் வந்தாலும் அதனை தனியாகவே சந்திக்கப்போவதாக அவர் கூறியிருந்தர். அரசியலில் ஈடுபடப்போவது குறித்து தெளிவான கருத்துக்களை தற்போது முன்வைத்து வருகிறார். 

கமல் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துக்களை திரையுலக பிரமுகர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கூறி வருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அரசியலுக்கு வந்தால்தால் அரசியல் என்ன என்பது புரியும் என்று கூறியிருந்தார்.

திரைப்பட இயக்குநர் மிஷ்கின், நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்த பின்னரே அரசியலுக்கு வர வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியிருந்தார். நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று இயக்குநர் மிஷ்கினிடம் செய்தியாளர் கேட்டதற்கு, அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும், அரசியலுக்கு வருவதற்கான தகுதியும் ஆசையும் இல்லை என்று கூறினார்.

மேலும், திருடர்கள் இருக்கும் வரை திருட்டு டிவிடியை ஒழிக்க முடியாது என்றும் இயக்குநர் மிஷ்கின் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!