வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..! அதிரும் ராயப்பேட்டை அலுவலகம்..தெறிக்கவிடும் தொண்டர்கள்...

 
Published : Nov 23, 2017, 02:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..! அதிரும் ராயப்பேட்டை அலுவலகம்..தெறிக்கவிடும் தொண்டர்கள்...

சுருக்கம்

political parties celebrating after eci announcement

இரட்டை இலை சின்னம்  இபிஎஸ் ஒபிஎஸ் அணிக்கு  ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்  ஆணையம் அதிகாரபூர்வமாக  அறிவித்து உள்ளது 

இதனை  தொடர்ந்து  அதிமுக தொண்டர்கள்  உற்சாகத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு,தினகரன் அணிக்கும் ஒபிஎஸ் அணிக்கும் இடையே இரட்டை இலை சின்னம்  பெறுவதில் கடும் போட்டி  நிலவி வந்ததால்,கடந்த  மார்ச் மாதம் 22 ஆம் தேதி இரட்டை  இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்

பின்னர் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.நீண்ட நாட்களாக நடந்து வந்த பெரும் இழுப்பறிக்குபின், இன்று இரட்டை இலை சின்னம் யாருக்கு என ஒரு முடிவுக்கு வந்தது 

இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சட்டப்படி சொந்தம் என தொடர்ந்து சொல்லி  வந்த  தினகரன் அணி ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

எடப்பாடிக்கே சொந்தம் 

கட்சிக்கொடி,கட்சி பெயர், அதிகாரபூர்வ கடிதம் ஆகியவற்றை இபிஎஸ்-ஒபிஎஸ் அணி இனி பயன்படுத்த எந்த  தடையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதிலிருந்து அதிமுக என்ற கட்சி அதிகாரபூர்வமாக எடப்பாடிக்கே சொந்தமானது....

இதனை கொண்டாடும்  விதமாக  எடப்பாடி கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இதற்காக  தற்போது பெரும்பாலான  தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி,  பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு ஸ்வீட் கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!