யார் யார் என்ன சொல்லி இருக்காங்க..! பிராக்கட்ல மைண்ட் வாய்ஸ் எப்படினு பாருங்க..!

By thenmozhi gFirst Published Dec 25, 2018, 7:09 PM IST
Highlights

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முழுமையாக நடைபெற அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சி எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேசவில்லை, தேர்தல் வரும்போது ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

யார் யார் என்ன சொல்லி இருக்காங்க..! பிராக்கட்ல மைண்ட் வாய்ஸ் எப்படினு பாருங்க..! 

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முழுமையாக நடைபெற அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சி எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேசவில்லை, தேர்தல் வரும்போது ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமரவைக்கவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 3-வது அணி முயற்சி எடுத்துள்ளார், அது வெற்றி பெறாது என இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.(அப்படினா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுக்கும் கூட்டணி முயற்சி மட்டும்  வெற்றி பெரும் போல )

யாரை பார்த்தும் அஞ்சமாட்டேன், எதற்கும் முடியாது என்று சொல்ல மாட்டேன், கட்சித் தலைமை கூறினால் தேர்தலில் போட்டியிடுவேன் என புதுசா  கிளம்பி உள்ள விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.(கேப்டன் சன் ஆச்சே நீங்க நடத்துங்க பாஸ் )

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து கட்சி தலைவர் கமல் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.(ஸ்மிரிதி ராணியுடன் விவாதம் நடத்திய எபக்டோ என்னமோ ..)

தகவல் தொடர்பு சட்டங்களில் விரைவில் மாற்றம்!

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை தடுக்கும் வகையில் தகவல் தொடர்பு சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு தீவிரமாக அலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. (இதுதாங்க அனைத்தையும் விட கூடுதல் சிறப்பு தகவல்) 

click me!