ராமலிங்கம் கொலைக்கு அறிக்கை விட்ட கி.வீரமணி... ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் போட்டு கோர்த்துவிட்ட ஹெச்.ராஜா!!

Published : Feb 09, 2019, 01:41 PM ISTUpdated : Feb 09, 2019, 01:43 PM IST
ராமலிங்கம் கொலைக்கு அறிக்கை விட்ட கி.வீரமணி... ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் போட்டு கோர்த்துவிட்ட ஹெச்.ராஜா!!

சுருக்கம்

கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை தொடர்பாக இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதமாற்றத்தை எதிர்த்ததன் காரணமாகவே ராமலிங்கம் கொல்லப்பட்டார் என  செய்திகள் வைரலானது. இந்நிலையில் இப்படுகொலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதுதொடர்பாக பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இசுலாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர் என்பதை அப்பகுதியில் உள்ள பாமகவின் பொறுப்பாளர் இராமலிங்கம் என்பவர் கண்டித்தார் என்பதற்காக, அவரை சிலர் தாக்கி கொலை செய்தார்கள் என்ற செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாகும். 

அவரது கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்பட்ட பகைமையின் விளைவா? என்று ஆராயவேண்டியதும், குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கித் தருவதும் காவல்துறையின் கடமையும், பொறுப்பும் ஆகும்” என்று கூறியுள்ளார்.

ராமலிங்கம் கொலையில் தொடர்புடையவர்களுக்கு 2 ஜமாத் நிர்வாகம் பண உதவி செய்யப்போவதாக வாட்ஸ் அப்பில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் ஒன்று வலைதளங்களில் பரவி வந்தது. பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் அந்த ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ”கொலை குற்றவாளிக்கு மத ரீதியிலான ஆதரவு. இந்துவே இனியும் ஏமாறாதே” என கூறியிருந்தார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!