அலையில்லை சரி, அட நுரை கூடவா இல்ல?...வைகோவையும், கேப்டனையும் அழவைக்கும் தினகரன்...

By vinoth kumarFirst Published Dec 15, 2018, 2:50 PM IST
Highlights


*தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு. எந்த அங்கீகாரமும் அவருக்கு கிடையாது. தன்னை ஹைவோல்ட் மின்சாரகம்பி என்று அவர் கூறிக்கொள்வது அவருக்கே ஆபத்தாக முடியும்: என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். 


*கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வராதது பெரிய வருத்தத்தை தருகிறது. பத்து லட்சம் பேர் இறந்தால்தான் பிரதமர் தமிழகத்துக்கு வருவாரா?: என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசப்பட்டுள்ளார். 

(ரைட்டு! ஐந்து மாநில தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு டெல்லி கிலியேறி கிடக்குறதும், நீங்க துளியளவு கெத்தாகி இருக்கிறதும் புரியுது.)

*தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு. எந்த அங்கீகாரமும் அவருக்கு கிடையாது. தன்னை ஹைவோல்ட் மின்சாரகம்பி என்று அவர் கூறிக்கொள்வது அவருக்கே ஆபத்தாக முடியும்: என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். 
(தினகரனுக்கு பிராண்டு இல்ல, ரைட்டு. அந்த வெற்றிவேல் எப்படிங்க சார்? அவரது தான் ஏதோ தம்பி பாப்பான்னாரு, அப்புறம் ஆடியோ வந்துச்சு....)

*தமிழ்நாட்டில் ஏற்கனவே பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலைதான் இருக்கிறது. தற்போது அது புயலாக மாறும் நிலை உருவாகி உள்ளது: என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கிண்டலடித்துள்ளார். 
(தோழர், அவங்களுக்காச்சும் அலைன்னு ஒண்ணு இருக்குது. நமக்கு தமிழ்நாட்டுல வீதிக்கு வீதி கிளை இருந்தும் கூட அலை கூட வேண்டாம் அட அலைவிட்டுட்டு போகிற நுரை கூட இல்லையே! இதுக்கு என்ன பண்ணப்போறோம்?)

*இந்தியாவிலேயே முன் அனுமதி இல்லாமல் சந்திக்க கூடிய ஒரே முதல்வர் நான் தான்: என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதப்பட்டுள்ளார். 
(சரி, எளிமையா சந்திக்கிறோம்! சந்திச்சு கோரிக்கையையும் கொடுக்கிறோம், கொடுத்தால்....)

*எங்கள் கூடாரம் காலியாகிறது, அத்தனை பேரும் ஓடுகிறார்கள், கூடிய விரைவில் ம.தி.மு.க., தே.மு.தி.க. போல் ஆகப்போகிறது என்று சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் கற்பனை!  என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். 
(தல! உங்க பிரச்னையை பேசுறப்ப அதைப்பத்தி மட்டும் பேசுங்க. ஏற்கனவே கண்ணீரும் கம்பலையுமா இருக்கிற வைகோவையும், கேப்டனையும் தேவையில்லாம இழுத்து இன்னும் அழ வைக்கிறீங்க பாருங்க.)

click me!