இரண்டு காவல்துறை வாகனத்தில் தீ வைப்பு- மீண்டும் பதட்டநிலையை அடைந்தது தூத்துக்குடி

Asianet News Tamil  
Published : May 23, 2018, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
இரண்டு காவல்துறை வாகனத்தில் தீ வைப்பு- மீண்டும் பதட்டநிலையை அடைந்தது தூத்துக்குடி

சுருக்கம்

police van fire in thoothugudi

தூத்துகுடியின் போராட்டத்தில் 12 பேர் போலீஸின் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பொதுமக்கள் அவர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படவேண்டுமென மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்தனர்

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ளது அதனால் உடலை பார்க்க உறவினர்கள் குவிந்தனர். அவர்களுக்கு எதிராக காவல்துறை மீண்டும் 2முறை வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் குண்டு வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து தப்பியோடினர்.

சாலையோரமிருந்த காவல்துறை இரண்டு வாகனத்தில் தீ வைத்ததில் மீண்டும் பதட்ட நிலையை அடைந்துள்ளது தூத்துக்குடி நகரம்.

 

PREV
click me!

Recommended Stories

3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?
திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!