போலீஸ் ஓட ஓட வெட்டிக் கொலை.. நாகர்கோவிலில் பயங்கரம்.. ரவுடி வெறிச் செயல்.

Published : Jun 22, 2021, 10:53 AM IST
போலீஸ் ஓட ஓட வெட்டிக் கொலை.. நாகர்கோவிலில் பயங்கரம்.. ரவுடி வெறிச் செயல்.

சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புறா பறக்க விடுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.  

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புறா பறக்க விடுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி தப்பி ஓடிய நிலையில் போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கலை நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (32) 

இவர் மணிமுத்தாறு 12-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த  ஒரு வருடமாக இவர் பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சரவணை அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் திடீரென அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சரவணன் கையில் காயம் ஏற்பட்டது.  பின்னர் சுதாரித்துக் கொண்ட சரவணன் ரஞ்சித்தை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து அவரது கையில் ஏற்பட்ட அரிவாள் வெட்டு காயத்திற்கு மருத்துமனையில் சிகிச்சை பெற்று பின்பு மீண்டும் நண்பர் விக்ரம் என்பவருடன் ஊருக்கு திரும்பியுள்ளார் சரவணன்.

ஆனால் அவரை பின்தொடர்ந்து வந்து மறைந்திருந்த ரஞ்சித் மீண்டும் சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தார். அதைத் தடுக்கச் சென்ற விக்ரமுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த சரவணனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே போலீஸ் சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதல் விசாரணையில்.  ஒரு பெண்ணிடம்  ரஞ்சித் தவறாக நடக்க முயன்றதாகவும்,  அதை சரவணன் தட்டிக் கேட்டதால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது எனவும் கூறப்படுகிறது.  தப்பி ஓடிய ரஞ்சித்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு  மனைவியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்யும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!