Jai bhim : சூர்யாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ‘பழங்குடியினர்’ மீது வழக்கு போட்ட காவல் துறையினர்...

By manimegalai a  |  First Published Nov 24, 2021, 10:30 AM IST

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் காவல் துறையினர்.


இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். ஓடிடி தளத்தில் கடந்த 2ம்தேதி வெளியான இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

Tap to resize

Latest Videos

வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளார்கள் என்று கண்டனம் தெரிவித்தார் பாமக அன்புமணி ராமதாஸ். இந்த படத்தை எதிர்த்து பல்வேறு நபர்கள் கருத்து தெரிவித்தனர்.  குறிப்பாக பாமக-வினர் மற்றும் வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெய்பீம் திரைப்படத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில்  மதுரையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பழங்குடியின மக்கள். இதில் சாரைப்பாம்பு, நல்லபாம்பு, எலிகள், பூம் பூம் மாடு உள்ளிட்டவற்றை கொண்டு வந்து நடிகர் சூர்யா வாழ்க, முதல்வர் ஸ்டாலின் வாழ்க என அவர்கள் முக்கங்களை எழுப்பினர். மேலும், வன்முறையில் ஈடுபட்டால் பாம்பை விடுவோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்தும், திரைப்படத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை, துயரங்களை சிறப்பாக காட்சிப்படுத்தி நடித்த நடிகர் சூர்யாவுக்கும், திரைப்படத்திற்கும் ஆதரவளித்தும், தமிழகம் முழுவதும் பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், பழங்குடி மக்களுக்காக வாதாடி வெற்றி பெற்ற நீதியரசர் சந்துருவுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாம்பு மற்றும் எலி உடன் நூதன முறையில் போராட்டம் நடத்திய 51 பேர் மீது மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

click me!