JaiBhim: அக்னி குண்டத்தில் சூர்யா படத்தை எரித்து போராடினால் அரைபவுன் பரிசு.. வைச்சு செய்யும் வன்னியர் சங்கம்!

By Asianet TamilFirst Published Nov 24, 2021, 8:30 AM IST
Highlights

"நடிகர் சூர்யா வெளிப்படையாக அறிவித்துவிட்டு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தால், அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி, ஆண்கள், பெண்கள் சாணிப்பாலால் அபிஷேகம் செய்வார்கள்".

அக்னி குண்டத்தில், நடிகர் சூர்யாவின் படத்தை எரித்து போராட்டம் நடத்துவோம். போராட்டம் நடத்துவோருக்கு அரை பவுன் தங்க காசு வழங்கப்படும் என்று என்று வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

‘ஜெய்பீம்’  படத்தில் போலீஸ் வில்லன் வீட்டில் அக்னி கலச காலாண்டர் வைத்தது. உண்மை சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போலீஸ் அந்தோணிசாமியின் பெயரை குருமூர்த்தி மாற்றியது போன்ற விவகாரங்களை வைத்து ஜெய்பீம் படத்துக்கு எதிராகவும் நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் பாமக, வன்னியர் சங்கம் மற்றும் இதர வன்னியர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சூர்யா - ஜோதிகா 24 மணி  நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும், 5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. ஜெய்பீம் படத்துக்கு விருதுகள் வழங்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம், சூர்யா, ஜோதிகா, ஞானவேல், அமேசான் மீது வழக்கு என வன்னியர் சங்கம் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.

இதற்கிடையே ஏற்கெனவே சூர்யாவை எட்டி உதைத்தா ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று மயிலாடுதுறை பாமக செயலாளர் சிவக்குமார் அறிவித்தது சர்ச்சையானது. அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்நிலையில் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு அரை பவுன் தங்கக் காசு வழங்கப்படும் என்று வன்னியர் சங்கம் அறிவித்துள்ளது. நடிகர் சூர்யா உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி வன்னியர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “வன்னியர் சமூக மக்களை இழிவுப்படுத்தி ஜெய்பீம் படம் எடுத்திருக்கிறார்கள். இப்படி வன்முறையை ஏற்படுத்தி அமைதியைச் சீர்குலைப்பதை பொறுக்க முடியாது. இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், டிசம்பர் 23-ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் வன்னியர் மக்களைத் திரட்டி, அக்னி குண்டத்தில், நடிகர் சூர்யாவின் படத்தை எரித்து போராட்டம் நடத்துவோம்.

அப்படி போராட்டம் நடத்துவோருக்கு அக்னி கும்பம் படம் பொறித்த அரை பவுன் காசு வழங்கப்படும். நடிகர் சூர்யா வெளிப்படையாக அறிவித்துவிட்டு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தால், அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி, ஆண்கள், பெண்கள் சாணிப்பாலால் அபிஷேகம் செய்வார்கள்” என்று ஸ்டாலின் பேசினார். 

click me!