அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணத்தின் 200வது தொகுதியாக அண்ணாநகரில் நடைபயணம் செய்ய பாஜகவினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அண்ணாமலையின் பாதயாத்திரை
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளை கைப்பற்ற திட்டம் வகுத்துள்ளது. இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் அமித்ஷாவின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நடைபயணத்தின் போது மத்திய அரசின் திட்டங்களையும், மோடியின் சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் 190க்கும் மேற்பட்ட தொகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் வருகிற 25ஆம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
undefined
பாதயாத்திரை நிறைவு- மோடி பங்கேற்பு
இறுதி நாள் பாதயாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இதனிடையே சென்னையில் வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அண்ணாமலை நடைபயணம் செல்லவுள்ளார். அப்போது 200வது தொகுதியாக அண்ணாநகர் தொகுதிக்கு செல்லவுள்ள நிலையில், மிகப்பிரம்மாண்டமாக என் மண் என் மக்கள் பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சென்னையில அண்ணாமலையின் நடைபயணத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சென்னையில் பாதயாத்திரைக்கு மறுப்பு
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உள்ள முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதால், அதிகமான அளவு கூட்டம் கூடும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதாலும், பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதே நேரத்தில்பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்
பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்... பிரதமர் மோடி உரை குறித்து முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!