கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை சப்ளை.. 22 வயசில் வேற லெவல் பிசினஸ்.. கொத்தா சிக்கிய மித்ரா..

Published : Mar 19, 2022, 02:32 PM ISTUpdated : Mar 19, 2022, 02:34 PM IST
கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை சப்ளை.. 22 வயசில் வேற லெவல் பிசினஸ்.. கொத்தா சிக்கிய மித்ரா..

சுருக்கம்

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தனிப்படை போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அதில், டெல்லியில் இருந்து 100 மாத்திரைகளை எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கி, அதில் பத்து மாத்திரைகளை 2500 ரூபாய்க்கு ராஜலட்சுமி குழுவினர் விற்பனை செய்து வந்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை வினியோகம்  செய்துவந்த கும்பளுக்கு மூளையாக செயல்பட்டு வந்த ராஜலட்சுமி என்கிற மித்ரா என்ற பெண் உட்பட 6 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதமாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதே போல் கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனையும் ஆன் லைனில் அதிகரித்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உரிய மருந்து சீட்டு இல்லாமல் யாரும் வலிநிவாரணி மாத்திரைகளை வழங்கக்கூடாது என அனைத்து  மெடிக்கல் ஷாப்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல நேரங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்தான் மருந்தகங்களில் பரிந்துரை சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்தார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் போதைப் பொருட்களை ஒழிக்க டிடிஏ ( drive against drugs) என்ற ஆபரேஷன் மூலம் போதைப் பொருள் கும்பல் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார். அந்த கும்பலின் வேர் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை அழிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை  109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களிடம் இருந்து சுமார் 150 கிலோ கிராம் கஞ்சா, 904 கிராம் மெத்தபெடமைன் போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதிகப்படியான போதை மாத்திரைகள் டெல்லியில் இருந்து  கொரியர் மூலமாக கொண்டு வரப்படுவதாகவும், அதை தடுக்க கொரியர் நிறுவனங்களை அழைத்து ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் கூறினார். ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், கொரியர் களிலிருந்து கடத்தப்பட்டு வரும் போதை பொருட்களை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். எனவேதான் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கல்லூரிப் பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகளை விநியோகம் செய்து வந்த கும்பலை கைது செய்துள்ளனர்.

அதாவது கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் கடந்த 17ஆம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் வைத்திருந்த கைப்பையை ஆராய்ந்தபோது அதில் ஏராளமான வலிநிவாரணி மாத்திரைகள் இருந்தது. அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அசோக் நகரைச் சேர்ந்த கிஷோர் என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் கே.கே நகரை சேர்ந்த கிஷோர் குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவரிடம் ஏராளமான வலிநிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொத்தவால்சாவடி சேர்ந்த பூங்குன்றன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்து பாண்டி, ஆண்டிபட்டி சேர்ந்த கோவலன், மற்றும் பூந்தமல்லி சேர்ந்த ராஜலட்சுமி என்கிற மித்ரா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது ராஜலட்சுமி வலி நிவாரணி மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை கல்லூரி மாணவிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 7.125 வலி நிவாரண மாத்திரைகள், இரண்டு லேப்டாப், ஒரு ஐபேட், ஒன்பது செல்போன்கள், நான்கு லட்சம் ரொக்கப் பணம் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியிலிருந்து கொரியர் மூலமாக மாத்திரைகளை வரவழைத்து தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக அவர்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  இதுகுறித்து ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்தியதில், ராஜலட்சுமி பப்ஜி விளையாடி வந்ததாகவும், அப்போது பூங்குன்றன் என்பவருடைய அறிமுகம் கிடைத்ததாகவும். இருவரும் கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்கலாம் என திட்டமிட்டதாகவும், கருக்கலைப்பு மாத்திரைகளுடன் சேர்த்து வலி நிவாரணி மாத்திரைகளையும் விற்க பூங்குன்றன் ஐடியா கொடுத்ததாகவும், எனவே இந்த மாத்திரைகளை மொத்தமாக டெல்லியிலிருந்து கொரியர் மூலமாக அவர்கள் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தனிப்படை போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அதில், டெல்லியில் இருந்து 100 மாத்திரைகளை எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கி, அதில் பத்து மாத்திரைகளை 2500 ரூபாய்க்கு ராஜலட்சுமி குழுவினர் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து 2500 ரூபாய்க்கு மாத்திரைகளை வாங்கிய கோகுல், கிஷோர்குமார் அதை 3 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளனர். அதில் கிடைத்த கொள்ளை லாபத்தின் அடிப்படையில் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. கல்லூரி மாணவ மாணவிகளை குறிவைத்து இந்த கும்பல் வலி நிவாரணி மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்று வந்துள்ளனர். மித்ரா டெல்லியில் யாரிடமிருந்து மாத்திரைகளை வாங்கினார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!