டிடிவி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை - மாநகராட்சி அதிரடி...

Asianet News Tamil  
Published : Sep 11, 2017, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
டிடிவி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை - மாநகராட்சி அதிரடி...

சுருக்கம்

police donot permission to ttv dinagaran meeting on trichy

டிடிவி தினகரன் திருச்சியில் வரும் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் அனுமதி கேட்டிருந்த நிலையில் அவருக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.  

அந்த வகையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 8 ஆம் தேதி திருச்சியிலும் டிடிவி தினகரன் தலைமையில் செப்.9 ஆம் தேதியும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருந்தால் மாநில அரசு அனுமதிக்க கூடாது என கூறி வழக்கை ஒத்திவைத்தது. 

இதைதொடர்ந்து அறிவிக்கப்பட்டபடி காவல்துறை தடையையும் மீறி திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த நீட் எதிர்ப்பு கூட்டத்தை ரத்து செய்வதாக டிடிவி தினகரன் அறிவித்தார். 

இந்நிலையில், வரும் 16 ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை அருகே நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு டிடிவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால் அந்த இடத்தில் அன்றைய நாளில் வேறு ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் டிடிவி தினகரன் தரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!