மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த களமிறங்கிய காவல் துறை..!! காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா எடுத்த அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2020, 11:57 AM IST
Highlights

மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களை பொது இடத்தில் கூட்டம் கூடும் அவர்களை உடனுக்குடன் எச்சரிக்கவும் மதுரை மாநகர போலீசார் புதுவகை டெக்னிக்கை கையாண்டு வருகின்றனர்.  

மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களை பொது இடத்தில் கூட்டம் கூடும் அவர்களை உடனுக்குடன் எச்சரிக்கவும் மதுரை மாநகர போலீசார் புதுவகை டெக்னிக்கை கையாண்டு வருகின்றனர்.  அதாவது கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில்  ட்ரோன் மூலம் ஒலிபெருக்கி அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் தீவிர கண்காணிப்பில் உள்ள 54 பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் மூலம் ஒலிபெருக்கி அமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  அதிலும் சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதன் தாக்கம் பன்மடங்காக உயர்ந்துள்ளது.  இந்நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு  எளிதில் புரியும் வகையில் எடுத்துரைக்க மதுரை காவல் துறையால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அனைவரும் தவறாது கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றவும், பொதுமக்களின் நடமாட்டங்களை கண்காணித்து அவர்களைப் பாதுகாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்றுமுதல் மதுரை மாநகரில் போலீசார் அந்தந்த பகுதிகளில் தீவிரமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் பகுதியான பழைய குயவர்பாளையம், முனிச்சாலை, ராம் தியேட்டர், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் ஒலிபெருக்கி அமைத்து காவல்துறையினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியினை கடைபிடுக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த கொடிய நோயான கொரோனா வைரஸ் நோயிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும் என்றும் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

 

click me!