அதிமுக மீது களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் மருமகன் !! பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி குற்றச்சாட்டு !!

Published : Mar 11, 2019, 09:51 PM IST
அதிமுக மீது களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் மருமகன் !! பொள்ளாச்சி ஜெயராமன்  அதிரடி குற்றச்சாட்டு !!

சுருக்கம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக மீது திமுக களங்கம் கற்பிக்க முயற்சி செய்வதாகவும் இந்த பிரச்சனைக்கு முழு முதற் காரணம் ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான்  என்றும் துணை சபாநாயகத் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

பொள்ளாச்சி மாணவிகள், இளம் பெண்கள் வீடியோ விவகாரத்தில் தொடர்புடைய ஆளுங்கட்சியினர் யார், யார் என்பதற்காக ஆதாரங்களை தேர்தலுக்கு முன் வெளியிட ஒரு தரப்பினர் தயராகிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடியோக்கள் எப்படி வெளியானது என்று போலீஸார் விசாரித்துவரும் நேரத்தில் வழக்கில் கைதானவர்களின் பின்னணியோ பதற வைக்கிறது. ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என்ற காரணத்தால் வழக்கின் விசாரணையின் கோணம் மாறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. 

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக தூண்டுதலின் பேரில் அதிமுக மீதும் தன் மீதும் களங்கம் கற்பிக்க முயற்சி செய்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

இந்தப் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்டிக எடுக்க வேண்டும் என்றும் நான்தான் புர் அளித்தேன் என்று சொன்ன ஜெயராமன், தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் எங்கள் மீது களங்கம் விளைவிக்க திமுக செய்கிறார்கள் என தெரிவித்தார். 

ஆனால் அதற்கு முழுக்க முழுக்க  காரணம் ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் என்றும், .இது திமுக விற்கு கைவந்தக்கலை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தென்றல் மகனிற்கும் முதல் குற்றவாளிக்கும் நல்ல நட்பு உள்ளது. காவல்துறை விசாரிக்க வேண்டும். திருநாவுக்கரசு கைது செய்யப்படுவதற்கு முன்பு ஸ்டாலின் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.அதற்கான ஆதரம் என்னிடம் உள்ளது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!