திமுக கூட்டணியில் சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !! பிரகாஷ் காரத் வெளியிட்டார் !!

By Selvanayagam PFirst Published Mar 11, 2019, 8:05 PM IST
Highlights

திண்டுக்கல்லில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ்  காரத், தமிழகத்தில் மதுரை மற்றும் கோவை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.
 

வரும் ஏப்ரல் மாதம்  11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக  நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடது சாரிகள் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியலை இணைந்துள்ளன.

இதில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், இடது சாரிகள், விசிக கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், திமுக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தொகுதிகள் பங்கீடு குறித்து பேச்சு நடைபெற்று வருகிறது. ஆனால் எந்தெந்த கட்சிகளுக்கு  எந்தெந்த தொகுதிகள் என்பதை இதுவரை முடிவு செய்யப்பட்டாலும், அதனை திமுக தலைவர் ஸ்டாலின்தான் அறிவிப்பார் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தமிழகத்தில் மதுரை மற்றும் கோவை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளை ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிபிஎம் போட்டியிடும் தொகுதி குறித்த விபரங்களை பிரகாஷ் காரத் அறிவித்திருப்பது சலசலப் ஏற்படுத்தியுள்ளது.

click me!