Poes garden | ஜெயலலிதா இடத்தைப் பிடித்த தீபா... போயஸ் கார்டன் வீட்டு பால்கனியில் மாஸ் காட்டி அசத்தல்..!

By Asianet TamilFirst Published Dec 10, 2021, 11:01 PM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள பால்கனியில் ஜெயலலிதா நின்ற அதே இடத்தில் தீபா நின்று கையை அசைக்கும் புகைப்படம் இணையத்தைச் சுற்றி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள பால்கனியில் ஜெயலலிதா நின்ற அதே இடத்தில் தீபா நின்று கையை அசைக்கும் புகைப்படம் இணையத்தைச் சுற்றி வருகிறது.

2016இல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா வசித்து வந்தார். ஆனால், அவர் 2017-ஆம் ஆண்டில் சிறைச்சாலைக்கு சென்ற பிறகு, அந்த வீட்டுக்குள் யாரும் செல்ல முடியவில்லை. தீபா செல்ல முயன்றபோது அவரை விரட்டியடித்த சம்பவம் நடந்தேறியது. இ ந் நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு முடிவு செய்தது. ஆனால்,  அரசின் இந்த முடிவுக்கு ஜெயலலிதாவின் ரத்த வழி சொந்தமான தீபாவும் தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு ஜெயலலிதா வீட்டை அரசு இல்லமாக எடப்பாடி பழனிச்சாமி அரசு மாற்றியது. அதற்கு உண்டான இழப்பீட்டு தொகையை நீதிமன்றத்திலும் அரசு செலுத்தியது. ஆனால், ஜெயலலிதா வீட்டை அரசு இல்லமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவும் தீபக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம, ஜெயலலிதா வீட்டை பொதுமக்கள் பார்வையிட தடை விதித்தது.

இதற்கிடையே இந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் வந்தது., ஜெயலலிதாவின் வீட்டை அரசு இல்லமாக மாற்றியது செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் வீட்டுச் சாவியை தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தீபா, தீபக் சார்பில் வீட்டுச் சாவியை கேட்டு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகினர். அவரும் ஜெயலலிதாவின் வீட்டுச் சாவியை தீபா, தீபக்கிடம் ஒப்படைத்தார்.

இதனையத்து போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு இன்று கணவர் மாதவனுடன் தீபா வந்தார். வீட்டைச்சுற்றி பார்த்த தீபா, மொட்டை மாடியில் நின்று கையை அசைத்தார். இதேபோல பால்கனியில் நின்றும் தீபா கையை அசைத்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதா பால்கனியில் நின்று தொண்டர்களுக்கு கையை அசைத்தார். ஜெயலலிதா நின்ற அதே இடத்தில் நின்று தீபாவும் கையை அசைத்த புகைப்படம் தற்போது இணையத்தைச் சுற்றி வருகிறது. 

click me!