Jai Bhim: பாபா முதல் ஜெய் பீம் வரை.... சினிமாவில் பாமக ஏற்படுத்திய சலசலப்புகள் என்னென்ன? - முழு விவரம்

Published : Nov 20, 2021, 02:47 PM IST
Jai Bhim: பாபா முதல் ஜெய் பீம் வரை.... சினிமாவில் பாமக ஏற்படுத்திய சலசலப்புகள் என்னென்ன? -  முழு விவரம்

சுருக்கம்

ஜெய் பீம் விவகாரத்தை ஊதி ஊதி பெரிதாக்கிய பாமக, சினிமா படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் ரஜினி நடித்த பாபா, விஜய் நடித்த சர்கார், போன்ற படங்களுக்கும் பாமக எதிர்ப்பு தெரிவித்தது.   

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். தீபாவளி பண்டிகையையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கியது. இப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பாமக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ஜெய் பீம் படக்குழு மீது அதிருப்தி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதேபோல் வன்னியர் சங்கமும் ஜெய் பீம் படக்குழு ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என வலியுறுத்தி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

இவ்வாறு இந்த விவகாரத்தை பாமக-வினர் பூதாகரமாக்கி வந்தாலும், மறுபுறம் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். இதேபோல் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக #westandwithsuriya என்கிற ஹேஸ்டேக்கை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கினர்.

இவ்வாறு ஜெய் பீம் விவகாரத்தை ஊதி ஊதி பெரிதாக்கிய பாமக, சினிமா படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் ரஜினி நடித்த பாபா, விஜய் நடித்த சர்கார், போன்ற படங்களுக்கும் பாமக எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக கடந்த 2002-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த பாபா திரைப்படத்தில், அவர் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகமாக இருப்பதாக பாமக போர்க்கொடி தூக்கியது. வட தமிழகத்தில் போராட்டம் வெடித்த நிலையில் திரையரங்குகளும் கதிகலங்கின. 

இதையடுத்து சர்கார் பட போஸ்டரில் நடிகர் விஜய் சிகரெட் பிடிக்கும் வகையிலான காட்சி இடம்பெற்றதற்கும் பாமக எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இவையெல்லாம், சமூகத்தில் தீங்கை விளைவிக்கக் கூடியது என்பதாலும், இளைஞர்களை தவறாக ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாலும் பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இது ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஜெய் பீம் விவகாரத்தில், பாமக-வின் எதிர்ப்பும், சர்ச்சையும் தேர்தல் தோல்விக்கு மத்தியில் தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காக அக்கட்சி செய்யும் அரசியல் விளம்பரம் என்றே கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்