விவசாயிகள் போராட்டம் பற்றிய வரலாற்று தருணங்கள்- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நன்றி …..!

By manimegalai aFirst Published Nov 20, 2021, 2:35 PM IST
Highlights

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் எனவும், அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் எதிர்த்து விவசாயிகள் தொடர் போரட்டங்கள் நடத்தி வந்தனர். டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும், பிற மாநிலங்களிலும் விவசாயிகள் நடத்திய போராட்டம், நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றது. குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்திய நிலையில், டிராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து பல விவசாய சங்கங்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்.

டெல்லி- உத்தரப் பிரதேசத்தின் முக்கிய எல்லையான காசிப்பூரில் போராடி வந்த பெரும்பாலான விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இதனால், இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டபோதிலும் பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட ஒரு சில விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டதினை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை தொடர்வதாக அறிவித்தனர். பஞ்சாய் – டெல்லி, ஹரியானா – டெல்லி போன்ற தலைநகரின் முக்கிய சாலையில் விவசாயிகள் பகல் , இரவு பாராமல் தொடர் போராட்டம் நடந்தினர். குளிர், வெயில் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் போராட்டம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மத்திய வேளாண் அமைச்சர்கள் தலைமையில் விவசாய சங்கங்களுடன் பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகள் நடத்துப்பட்டு, அனைத்தும் தோல்வியையே தழுவியது. மூன்று சட்டங்களையும் ரத்து செய்தால் மட்டுமே தாங்கள் போராட்டத்தினை கைவிடுவோம் என விவசாயிகள் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருந்தனர்.

இந்நிலையில், நேற்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அதிரடியாக அறிவித்தார். இதை வரவேற்று, போராடும் விவசாயிகள் அனைவரும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இருப்பினும், மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து என பிரதமர் மோடி அறிப்பாகத்தான் வெளியிட்டிருக்கிறார். சட்டபூர்வமாக, எழுத்துபூர்வமாக கையெழுத்தாகி, அதை நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை எங்களின் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் எனவும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது  பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்கு கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என கூறியுள்ளார். மேலும் அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

click me!