Ramadoss : “உங்களை நம்பித்தானே கட்சியை ஆரம்பிச்சேன்.. நீங்களே இப்போ ? சோகத்துடன் பேசிய ராமதாஸ்”

By Raghupati RFirst Published Dec 13, 2021, 7:59 AM IST
Highlights

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, 'நான் உங்களுக்காக பொது வாழ்க்கைக்கு வந்து 42 ஆண்டுகள் ஆகிறது. உங்களை சரியாக வழிநடத்தவில்லையா? என்ன தவறு செய்து விட்டேன். 370 சாதியினரும் பயன்பெற போராடி இடஒதுக்கீடு வாங்கினோம்.  கிடைத்த இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கிடைக்கத்தான் பாடுபட்டேன். 108 சமூகத்தினர் எதிர்த்து, தடுத்து விட்டனர். தற்போது, அதற்கு தடை ஆணை பெற சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளோம். வட தமிழகத்தில் தடுக்கி விழுந்தால், வன்னியர்கள் மீதுதான் விழ வேண்டும். 

அப்படி இருக்கும் நிலையில், நாம் ஆட்சியை கைப்பற்றி இருக்க வேண்டும். வன்னியர்கள் மட்டும் 2 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்பி தானே கட்சியை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தனியாக போட்டியிட்டு 4 எம்.எல்.ஏ. சீட் வென்றோம். அப்படியே தொடர்ந்து தனித்து போட்டியிட்டு இருந்தால், ஆட்சியை கைப்பற்றியிருக்கலாம். ஆனால், சிலர் கூறியதன் பேரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோற்றோம். 

தேர்தலில் கூட்டணி என்றாலே காலை வாருவதாக இருக்கிறது. கூட்டணி தர்மமெல்லாம், அதர்மமாகிவிட்டது. கடந்த தேர்தலில் 23 தொகுதியில் போட்டியிட்ட நிலையில், குறைந்தது 15 தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். கர்நாடகாவில் 40 எம்.எல்.ஏ. சீட் ஜெயித்த குமாரசாமி 3 முறை முதல்வராகிவிட்டார். அவரது தந்தை பிரதமரே ஆகியிருக்கிறார். நீங்கள் ஒன்று சேர்ந்து பா.ம.க.விற்கு ஆதரவு அளித்திருந்தால், இங்கும் அதுபோல் நடந்திருக்கும். அதனால், முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள்தான் இருக்கிறீர்கள். எந்த கட்சியில் வன்னியர்கள் இருந்தாலும், ஓட்டு மட்டும் மாம்பழத்திற்கு போட வேண்டும். அப்படி செய்தால், 70 முதல் 80 எம்.எல்.ஏ. வரமுடியும். பிறகு மற்ற சமூகத்தினரும் ஏற்று கொள்வார்கள் என்று பேசியுள்ளார்.

click me!