தமிழகத்தில் 6,715 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதை தமிழக அரசு எடுத்து நடத்தி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பதாகவும், விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, குற்ற சம்பவங்கள், இளம் கைம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஊழியர்களிடம் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் 6715 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதை தமிழக அரசு எடுத்து நடத்தி வருகிறது. இந்த கடையால் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பதாகவும், விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, குற்ற சம்பவங்கள், இளம் கைம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
undefined
இதையும் படிங்க;- தெரு தெருவா சாராய கடைய திறந்துவிட்டு Ethics பற்றி பேசலாமா? திராவிட தொடைநடுங்கி.. ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்.!
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்து நாயக்கன்பட்டி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் தலைமையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார்.
இதையும் படிங்க;- மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்கணும்னா.. டாஸ்மாக் கடையை மூடுவதே ஒரே வழி.. அன்புமணி..!
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஒரு மாதத்தில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் நிறைவு அடைந்தும் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால், பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்ற பாமக எம்எல்ஏ அருள் கடை ஊழியர்களின் காலில் விழுந்து, கடையை மூட நடவடிக்கை எடுங்கள் என கெஞ்சி கேட்டுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க;- மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு வேற எதுவும் கிடையாது.. அன்புமணி.!