மாநில கட்சி அந்தஸ்தை இழக்கிறது பாமக !! தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசால் அதிர்ச்சியில் ராமதாஸ் !

By Selvanayagam PFirst Published Aug 31, 2019, 9:21 AM IST
Highlights

மாநிலக் கட்சிக்குரிய அங்கீகாரத்தை பெறும் தகுதிகளை இழந்து விட்டதால் உங்களுடைய மாநில கட்சி அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது எக பாமகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் சின்னங்கள் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு)- 1968 உத்தரவின்படி ஒரு கட்சியானது மாநிலக் கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. 

அதாவது, மாநில கட்சி அந்தஸ்தை பெற ஒரு கட்சி சட்டமன்றத் தேர்தலில் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அத்தோடு, 2 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் கட்சியின் மாநில அந்தஸ்து பறிபோகும்.

இந்த நிலையில் மாநிலக் கட்சிக்குரிய அங்கீகாரத்தை பெறும் தகுதிகளை பூர்த்தி செய்யாததால் அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம், பாட்டாளி மக்கள் கட்சி, , கேரளாவில் செயல்படும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மணிப்பூரின் மக்கள் ஜனநாயகக் கூட்டணி, மிசோரம் மக்கள் மாநாடு ஆகிய  கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், உங்களுடைய மாநில கட்சி அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் இந்த கட்சிகள் தேர்தலில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் குறைவான வாக்கு சதவிகிதத்தை பெற்றதால் தேசியக் கட்சி அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என விளக்கம் கேட்டு தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.

click me!