‘தேர்தல் நேரத்தில் எல்லா வன்னியர்களும் என் பின்னால் எனக்கு ஓட்டுப்போட வேண்டும். இனி வருங்காலம் நமது காலம். எனக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தும் நான் வந்து சமூகத்திற்காக இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்று பேசியிருக்கிறார் ராமதாஸ்.
விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை விழுப்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாமக தலைவர் ஜி.கே மணி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ‘1952 ஆம் ஆண்டு 40 வன்னியர்கள் எம்.எல்.ஏக்கள் வெற்றிப்பெற்றார்கள். ஆனால் தற்போது நம் கட்சியின் நிலை என்ன? எங்கே போனது, வீரம், மானம், சத்திரியர்களின் வீரம். இதுவரை ஒரு வன்னியரால் கூட முதலமைச்சராக முடியவில்லை. வன்னியர்கள் ஆகிய நாம் எப்போதும் எடுப்புடி தானே... கடந்த சட்டமன்ற தேர்தலின் போது,எங்களுக்கு தனி ஒதுக்கீடு இல்லை என்றால், ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, உப்பும் இல்லை என்றோம்.
undefined
அப்போது தான் பேச்சு வார்த்தைக்கு அழைத்து 23 சீட்டு கொடுத்தனர். சி.வி.சண்முகம் இல்லை என்றால் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. வருகிற மாநாகராட்சி நகராட்சி, பேருராட்சி, எல்லா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
தேர்தல் நேரத்தில் எல்லா வன்னியர்களும் என் பின்னால் எனக்கு ஓட்டுப்போட வேண்டும். இனி வருங்காலம் நமது காலம். எனக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தும் நான் வந்து சமூகத்திற்காக இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினர் பணியிடங்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை, 12 தேர்வானைய பணியிடங்கள் காலியாக இருந்தது.
நான் கெஞ்சி கேட்டும் அதில் ஒருவரைக்கூட வன்னியர் நியமிக்கப்படவில்லை தற்போதுள்ள ஸ்டாலின் அரசு ஒருவரை உறுப்பினராக நியமித்துள்ளது என்ரும், வட மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய மக்கள் என் பின்னால் வந்து என் பேச்சைக் கேட்டால் அனைத்தும் தலைகீழாக மாறும். ஒரே முறை பா.ம.க விற்க்கு வாக்களித்து அன்புமணி ராமதாஸை முதல்வராக்குங்கள். அதற்கு பொறுத்தமானவர் அவர். தேர்தல் என்றால் தொண்டர்கள் மட்டுமல்ல பொறுப்பாளர்களும் பணத்திற்கு மயங்கிவிடுகின்றனர். விலை போய் விடுகின்றனர்’ என்று பேசினார்.