சபாஷ்... முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்... அப்படியே ஒரு கோரிக்கையும் வச்சியிருக்காரே...!

By Kanimozhi PannerselvamFirst Published May 29, 2021, 5:25 PM IST
Highlights

தமிழக அரசின் இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் மனதார பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனிடையே கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களும் தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறது. அத்துடன் கொரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வந்தது. 

டெல்லி, மத்தியப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவும் விதமாக நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக சேர்க்கப்படும் என்றும், அவர்கள் 18 வயதை அடையும் போது அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதிக்கான செலவையும் அரசே ஏற்கும் என்றும், கொரோனாவால் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்களுடன் வசித்து வரும் குழந்தைகளுக்கு அவர்கள் 18 வயது அடையும் வரை மாதம்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என்றும் அரசு விடுதி, இல்லங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்களில் இந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் மனதார பாராட்டியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது  வரவேற்கத்தக்கது. இது அவர்களுக்கு சிறந்த சமூகப்பாதுகாப்பை அளிக்கும் என பாராட்டியுள்ளார். அத்துடன் , “இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அதே பொருளாதார நெருக்கடி, வருவாய் ஈட்டும் ஒரு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும். எனவே, வருவாய் ஈட்டும் குடும்பத்தலைவரை இழந்த குழந்தைகளுக்கும் இதே உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்!” என வேண்டுகோளும் விடுத்துள்ளார். 
 

click me!