மக்கள் கிட்ட மாற்றம் வந்தாச்சு.. அடுத்த முறை நம்ம ஆட்சி தான்.. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி சூளுரை..

By Thanalakshmi VFirst Published May 16, 2022, 12:20 PM IST
Highlights

ஆட்சி மாற்றம் குறித்து மக்கள் மனதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பாமகவின் ஓட்டுகளாக மாற்ற வேண்டும் என்று சேலத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

ஆட்சி மாற்றம் குறித்து மக்கள் மனதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பாமகவின் ஓட்டுகளாக மாற்ற வேண்டும் என்று சேலத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் பாமக தலைவர் மணி தலைமையில் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 15 தொகுதிகளில் தற்போது 2 எம்.எல்.ஏக்கள் மட்டுமே நம் கட்சியை சேர்ந்தவர்கள்.. அடுத்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் பாமக வெற்றிப்பெற வேண்டும் என்று பேசினார்.

மேலும் படிக்க: ’தமிழக கல்விக்கூடங்களில் ஹிஜாப்.. இது மதவெறி செயல்’ - தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள் !

இங்கு சுமார் 55 ஆண்டுகளாக திமுக- அதிமுக கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் இங்கு தமிழ் மற்றும் கடவுளை வைத்து மட்டுமே அரசியல் செய்து வருகின்றனர். பாமக மட்டும் தான் தமிழகத்தில் வளர்ச்சி, முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். 

கடந்த 20 ஆண்டுகளாக பா.ம.க., மாதிரி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று நிஜ நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வோம் என்று கட்சியினரிடையே சூளுரைத்தார். மேலும் வன்னியர் இட  ஒதுக்கீடு குறித்து பேசிய அவர், நமக்கு வேண்டியது 20 சதவீதம். ஆனால் 10.5 % தான் கிடைத்தது. அதையுன் தற்போது தடுத்து விட்டார்கள் என்று ஆதங்கப்பட்டார்.

வன்னியர் ஒட ஒதுக்கீடு தொடர்பாகமுதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி விளக்கியுள்ளதாக அவர் கூறினார். வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எனவே வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும் என்று பேசினார்.  அதோடுமட்டுமல்லாம், சமூக நீதி தான் பா.ம.க வின் நோக்கம். தற்போது மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை நமக்கான ஓட்டுகளாக மாற்ற வேண்டும் என்று விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கார்த்தி, கண்ணையன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க: திமுக செய்தது சாதனை அல்ல; கடமை... திராவிட மாடல் குறித்து அன்புமணி கருத்து!!

click me!