PMK:தனித்து நின்றிருந்தால் பாமக ஆட்சி.. தமிழ்நாட்டை வீரவன்னியர்கள்தான் ஆளனும்.. தலையில் அடித்து கதறிய ராமதாஸ்.

By Ezhilarasan BabuFirst Published Dec 13, 2021, 12:40 PM IST
Highlights

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றோம் ஆனால் ஒரே ஒரு எம்எல்ஏவை கூட நாம் பெறவில்லை. இது எதனால்.? ஒட்டுமொத்த வட தமிழக மக்களும் வாக்களித்திருந்தால் அன்புமணி முதல்வராகி இருப்பார்.

தனியாகவே போட்டியிட்டிருந்தால் இந்நேரத்திற்கு பாமக ஆட்சியை கைப்பற்றி இருக்கும் ஆனால் கூட்டணியில் நிற்போம் என நம் கட்சியினர் சொன்னதைக் கேட்டு இதுநாள்வரை கூட்டணியில் நின்று வந்ததாகவும் ஆனால் இனிமேல் வீர வன்னியர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக  கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வரும் அவர் அக்காட்சி நிர்வாகிகளை விமர்சித்தும், அன்புமணியை முதல்வர் ஆக்கி தீரவேண்டும் என்றும் பேசி வரும் நிலையில், இத்தனை ஆண்டுகளாக கூட்டணி வைத்து பாமக மோசம் போனதாக அவர் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு அவரது கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு போராட்டம் நடத்தி அதன்மூலம் தமிழகத்தின் அரசியல் கட்சியாக உருவெடுத்தது பாமக. காலப்போக்கில் அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி கூட்டணி வைத்து வந்ததால், அக்காட்சி தலைமையின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. எந்த வன்னியர்களுக்காக கட்சியை ஆரம்பித்து தேர்தல் அரசியலுக்கு வந்தோமோ அதே வன்னியர்கள் முழுவதுமாக பாமக என்ற குடையின் கீழ் அணிதிரள வில்லையே என்பது மருத்துவர் ராமதாஸின் நீண்டநாள் ஏக்கமாக இருந்து வருகிறது.

அந்தக் கட்சி எடுத்த தவறான கொள்கை முடிவுகள், கூட்டணி வியூகங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை, வட இந்தியாவில் பாஜக எப்படி மதவாதத்தை வைத்து அரசியல் செய்கிறதோ, அதே போல பாமக சாதியை வைத்து அரசியல் செய்கிறது என்று அக்கட்சி மீது அழியாத சாதி முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதேபோல அடிக்கடி சினிமா நடிகர்களுக்கு எதிராக அக்கட்சி பேசிவருவது, தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வது போன்ற காரணங்களால் பொதுச் சமூகத்தின் மத்தியில் அதிக வெறுப்பை சம்பாதித்துள்ளது.

பாஜக, அதிமுக என இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்ளை எதிர்கொண்டுவரும் பாமக தனது செல்வாக்கு மிகுந்த பகுதிகளிலேயே கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஒரு கட்டத்தில் தனித்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டும் எதிர்பார்த்த அளவுக்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. பிறகு வழக்கம்போல அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவுக்கே அக்காட்சி தள்ளப்பட்டது. தற்போது பாஜக உடன் அந்த காட்சியை அதிக நெருக்கம் பாராட்டி வருவதால், சொந்த சமூக மக்களே அக்காட்சியை புறக்கணிப்பதாக ஒரு விமர்சனம் இருந்து வருகிறது.

அதேபோல் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த கட்சி, தனித்தே களம் கண்டும், கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மனமுடைந்து போன மருத்துவர் ராமதாஸ், கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் கடந்து விட்டது, ஆனால் இன்னும் கூட பாமகவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. நாம் யாருக்காக, எதற்காக கட்சி நடத்த வேண்டும்? ஒரேயடியாக கட்சியை கலைத்து விடலாமா? இத்தனை ஆண்டுகளாக அரசியல் நடத்திய எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றால் தவறு உங்கள் மீதா? என் மீதா எனதொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார் அவர்.

இதேபோல் சமீபத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர மனம்விட்டு பேசினார். அதில், 42 வருடங்களாக மக்களுக்காக பாடுபட்டிருக்கிறேன். உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிரோடு இருக்கிறேன், வயதான என்னால் பேச தான் முடியும், இனி இந்தக் கட்சியின் எதிர்காலம் இளைஞர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகளை நாம் பெறவேண்டும், ஒரு பூத்தில் 1000 வாக்குகளையாவது நாம் பெறவேண்டும். ஆனால் 60 இடங்களில் வெற்றி பெற்றால் அன்புமணியை முதல்வராக்கி விடலாம், அன்புமணியைப்போல ஒரு திறமைசாலி யாரும் கிடையாது. அவரிடம் மக்கள் ஆட்சியைத் தர ஏன் தயங்குகிறார்கள். நீங்கள் வீடு வீடாக சென்று பாமகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்டு அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என கூறியிருந்தார். 

மேலும் வன்னியர்கள் ஆண்டபரம்பயைச் சேர்ந்தவர்கள் ஆனால் இந்த சமூகம் இப்போது வீழ்ந்து கிடக்கிற சமூகமாக உள்ளது. நம் சமூகம் மீண்டு எழ வேண்டும் என்றால் விரைவில் கோட்டையில் நமது கொடி பறக்க வேண்டும் என அவர் பேசியிருந்தார். இந்நிலையில் அவர் வன்னியர்களை தூண்டும் நோக்கில் ஆண்ட பரம்பரை என்று பேசிகிறார் என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் பெரும் விவாத பொருளாகவும் மாறியது. இந்நிலைதான் சேலத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியிருப்பது மீண்டும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூட்டணி கட்சிகளையும், தாம் எடுத்த கூட்டணி முடிவையும் அவர் சுயவிமர்சனம் செய்யும் வகையில் பேசியுள்ளார் என்பதே அதற்கு காரணம். சேலத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:- நான் பிறந்த மாவட்டத்தை விட நான் அதிகம் நேசிக்கும் மாவட்டம் சேலம், தர்மபுரி மாவட்டங்களை தான். சேலத்தின் அடையாளமாகத்தான் நான் மாம்பழம் சின்னத்தை தேர்வு செய்தேன். இந்த மாவட்டத்தில் தான் முதல் முதலில் பாமக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும், அன்புமணி முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் போட்டார்கள். ஆனால் தனியாக நின்ற நாம் ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட பெறவில்லை.

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றோம் ஆனால் ஒரே ஒரு எம்எல்ஏவை கூட நாம் பெறவில்லை. இது எதனால்.? ஒட்டுமொத்த வட தமிழக மக்களும் வாக்களித்திருந்தால் அன்புமணி முதல்வராகி இருப்பார். யார் அதற்கு காரணம் வன்னியர்கள்தான் 42 ஆண்டுகளாக நான் உழைத்து வருகிறேன், 10.5 சதவீத இட  ஒதுக்கீட்டுக்காக அரும்பாடுபட்டேன், ஆனால் எனக்கு எதிராக சில சமூகத்தினர் பொங்கி எழுகிறார்கள்.  எனது இட ஒதுக்கீடு போராட்டத்தில் பயன்பெற்றவர்கள் எனக்கு எதிராக பேசுகிறார்கள், வட தமிழகத்தில் நமக்குள்ள செல்வாக்கிற்கு நாம் ஆட்சியை கைப்பற்றி இருக்க வேண்டும். வன்னியர்களை நம்பி பாமகவை ஆரம்பித்தேன், இனி நாம் யாரிடத்திலும் போய் பிச்சை கேட்க வேண்டாம் என்றுதான் கட்சி ஆரம்பித்தேன். தனியாக நின்று ஒரு எம்எல்ஏ பிறகு 4 எம்எல்ஏ பெற்றோம். தனியாகவே நாம் நின்றிருந்தால் ஆட்சியை பிடித்து இருக்கலாம். ஆனால் கூட்டணிதான் வைக்க வேண்டும் என கட்சியினர் கூறியதால்தான் கூட்டணி வைத்தோம்.
கூட்டணி என்றால் பாமககாரன் உயிரைக்கொடுத்து பாடுபடுவான்.

கடந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும், குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் ஆனால் கூட்டணி தர்மத்தை பிற கட்சிகள் மீறியதால் நாம் தோற்றோம். இன்னும் நீங்கள் ஏமாந்தது போதும் தனியாகவே வீரவன்னியனாகவே நம் தமிழ்நாட்டை ஆளுவோம்.  என் சமுதாயம் தமிழகத்தை ஆள வேண்டும் என்றுதான் என் ஆசை. இவ்வாறு அவர் பேசினார். 
 

click me!