2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாமக மற்றும் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாமக மற்றும் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற ராமதாஸ், அன்புமணியை எல்.கே.சுதீஷ் வாசலில் வந்து வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இளையரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் கோ.கா.மணி ஆகியோர் உடனிருந்தனர்.
2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக - பாமக கூட்டணியில் இருந்த போது கூட ராமதாஸ் - விஜயகாந்த் சந்திப்பு நிகழவில்லை. மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்ற நேரத்தில் கூட இரண்டு கட்சிகளும் பெரிய அளவில் நட்பாக இல்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிக இழுபறிக்கு காரணம் பாமகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததாகவும், பாமக கூட்டணியால் அதிமுக கூட்டணியில் இணைய தயங்குவதாகவும் வெளிப்படையாகவே கூறினார் தேமுதிக துணைப்பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வெளிப்படையாகவே கூறினார்.
அதிமுக கூட்டணியில் இணைந்தால் பாமக உள்ளடி வேலைகளை பார்க்கும் என தேமுதிக உள்ளூர சந்தேகப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. தொகுதிகளை ஒதுக்குவதிலும் இரு கட்சிகளுக்கும் போட்டி மனப்பான்மை இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்நிலையில் முதல்முறையாக விஜயகாந்தை, ராமதாஸ் தற்போது சந்தித்துப் பேசியுள்ளார். ஆகையால் மனக்கசப்பை மறந்து இரு கட்சியினரும் தேர்தலில் களப்பணியாற்றுவார்கள் எனக் கூறப்படுகிறது.