பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்.. ராமதாசுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்..!

Published : Oct 05, 2021, 12:36 PM ISTUpdated : Oct 05, 2021, 12:39 PM IST
பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்.. ராமதாசுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்..!

சுருக்கம்

பாமகவை சேர்ந்த தர்மபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

பாமகவை சேர்ந்த தர்மபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

சமீபத்தில் கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தர்மபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்தி பாமகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சத்தியமூர்த்தி  உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

இதையும் படிங்க;-பாமகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. ஜி.கே.மணி அதிரடி அறிவிப்பு..!

இதுகுறித்து, திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை;- முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேற்று பாமக தர்மபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் பாமகவைச் சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன், அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் செயலாளர் சபரி.லட்சுமணன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு  உள்ளிட்ட பாமகவைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை,  தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, எம்.பி.செந்தில்குமார், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு