வழக்கு நடத்துவதாக சொல்லி 2 கோடி ரூபாயை ஆட்டையை போட்ட பா.ம.க.,வினர்!! வெடித்த அடுத்த சர்ச்சை...

By sathish kFirst Published Apr 11, 2019, 7:27 PM IST
Highlights

8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த, விவசாயிகளிடம், 2 கோடி ரூபாயை, பா.ம.க.,வினர் வசூலித்தனர் என, திமுக முன்னாள், எம்.எல்.ஏ  ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த, விவசாயிகளிடம், 2 கோடி ரூபாயை, பா.ம.க.,வினர் வசூலித்தனர் என, திமுக முன்னாள், எம்.எல்.ஏ  ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி முன்னாள் திமுக MLA, ராஜா, கூறியதாவது; சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, முதன்முதலில், திமுகவைச் சேர்ந்த ரவிந்தீரன் தான், வக்கீல் கனகராஜ் மூலம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

இதில், நான்காவது நபராக நுழைந்தவர், பாமகவைச் சேர்ந்த அன்புமணி. இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து, 8 வழிச்சாலை திட்ட அறிவிப்பாணை ரத்து என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சேலம் உள்ளிட்ட, 5 மாவட்ட விவசாயிகளிடம், அத்திட்ட வழக்கு செலவுக்கு, பா.ம.கவினர், தலா, 2,000 ரூபாய் வீதம், 2 கோடி ரூபாய் வசூலித்தனர். முதலில் வழக்கு தொடுத்த, திமுக ஒரு காசு கூட, விவசாயிகளிடமிருந்து பெறாமல் வழக்கை நடத்தியது. 

திமுக ஆட்சியில், என் தந்தை ஆறுமுகம், பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் வந்த, சேலம் ரயில்வே கோட்டம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை, அன்புமணி ராமதாஸ், தான் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்டார். 

இது போன்ற பேச்சுகளை அன்புமணி ராமதாஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும், இனி இது தொடர்ந்தால், அவரது சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன் என இவ்வாறு கூறியுள்ளார்.

click me!