அமமுகவுக்கு புதிய கட்சி திடீர் ஆதரவு... அடிச்சுத்தூக்கும் டி.டி.வி அணி..!

By Thiraviaraj RMFirst Published Apr 11, 2019, 5:55 PM IST
Highlights

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அமமுகவுக்கு புதிதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. 
 

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அமமுகவுக்கு புதிதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. 

மக்களவை தேர்தலில் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகிறது திமுக. அதேபோல் அதிமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் சிறுபான்மையினரின் வாக்க்குகள் முழுவதும் டி.டி.வி.தினகரன் அணிக்கே வந்து சேடும் அளவுக்கு இஸ்லாமியர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அமமுகவுக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே எஸ்டிபிஐ கட்சியுடன் டி.டி.வி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் டிடிவி தினகரனை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

 

இந்நிலையில் புதிதாக தங்களது ஆதரவை தமிழ்நாடு முஸ்லீம் லீக் டி.டி.வி அணிக்கு அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் முஸ்தபா வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’வரும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு முழுமையான ஆதரவு. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சிறுபான்மையினரை நம்ப வைத்து துரோகம் செய்துள்ளது. மக்களுக்கு எதிரான பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. ஆகவே நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிக்கிறோம். 

மேலும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. தேனியில் ஓபிஎஸ் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அங்கு பண மழை கொட்டுகிறது. இதேபோன்ற முறைகேடுகளை புகாராக தந்தாலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் செயல்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து சிறுபான்மை மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் அவ்வாறு சிறுபான்மை மக்களின் வாக்குகள் முழுவதும் அவர்களுக்கு கிடைக்காது.

இஸ்லாமிய மக்களை சுட்டுகொன்றது திமுக ஆட்சியில் தான். இஸ்லாமியர்கள் குல்லா அணிந்து தாடி வைத்தவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்ததும் திமுக ஆட்சியில் தான். அவர்கள் பாஜகவை போல் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். அதிமுக பாஜக ஏ அணியாகவும், திமுக பாஜகவின் பி அணியாகவும் செயல்படுகிறது’’ என அவர் கூறினார். 

click me!