அமைச்சர் ஜெயக்குமார் ட்விஸ்ட்..! "தமிழகமும் நாங்கதான் இந்தியாவும் நாங்க தான் டோன்ட் வொரி"..!

Published : Apr 11, 2019, 04:55 PM IST
அமைச்சர் ஜெயக்குமார் ட்விஸ்ட்..!  "தமிழகமும் நாங்கதான் இந்தியாவும் நாங்க தான் டோன்ட் வொரி"..!

சுருக்கம்

தமிழகமும் நாங்கதான் இந்தியாவும் நாங்கதான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகமும் நாங்கதான் இந்தியாவும் நாங்கதான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைப் பற்றி சில விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் எங்கு பேசினாலும் தனிநபர் தாக்குதல் செய்கிறார்.

மத்தியில் ஆளும் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அம்மா அவர்களின் நீண்டநாள் ஆசை நதிநீர் இணைப்பு என்பது.

எனவே இந்த தேர்தல் அறிக்கையில் பாஜக நதிநீர் இணைப்பு குறித்து அறிவித்து உள்ளதால் மிக விரைவில் கண்டிப்பாக அந்த திட்டம் நிறைவேறும் என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸ் ஆட்சியின்போது நதி நீர் இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டு வேடிக்கை பார்த்தது. ஆனால் பாஜக அப்படி கிடையாது விரைவில் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்கிடையே இந்த திட்டத்திற்கு எனது அருமை நண்பர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. அவர் பொதுவாக நல்ல திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்.. இதனை பாராட்டுகிறேன். எனவே தமிழகமும் நாங்கதான் இந்தியாவும் நாங்கதான் என பேசி தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

PREV
click me!

Recommended Stories

Cockroach Janta Party : ஒரு தலைமுறையின் கோபத்திற்கு 'கரப்பான் பூச்சி' என்று பெயர்!
Ration Card Update: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த வேலையை உடனே முடியுங்க... இல்லைனா பொருட்கள் கிடைக்காது!