பாமகவை களத்தில் இருந்து விரட்டுவோம் !! குரு மகன் அதிரடி பேச்சு !!

Selvanayagam P   | others
Published : Jan 09, 2020, 08:23 PM ISTUpdated : Jan 09, 2020, 08:25 PM IST
பாமகவை களத்தில் இருந்து விரட்டுவோம் !!   குரு மகன் அதிரடி பேச்சு !!

சுருக்கம்

குரு ஆதரவாளரான வைத்தி  பதவி பறிக்கப்பட்டதையடுத்து பாமகவுக்குள் புயல் கிளம்பியுள்ளது. புதிய கட்சி தொடங்கப் போவதாகவும்,  தனது படிப்பு முடிந்ததும் அரசியலில் முழுமையாக இறங்கி பாமகவை களத்தில் இருந்தே விரட்டுவேன் என்று  காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் அதிரடியாக தெரிவித்துள்ளார்

பாமகவில் வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவுக்கு முக்கிய தளபதியாகவும் அவரது வலதுகரமாக செயல்பட்டவர் க.வைத்தி. இவர் பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், வன்னியர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்துவந்தார்.

குருவின் மறைவுக்குப் பிறகு அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பாமகவினர் மத்தியில் அவரது செல்வாக்கும் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. அடுத்த காடுவெட்டி குரு ஆக முயற்சிக்கிறார் என்று அவரது எதிர்ப்பாளர்களால் குற்றம்சாட்டப்படும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது.

இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில்  கடந்த 5 ஆம் தேதி  நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, பாமகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வைத்தி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பாமகவின் அரியலூர் மாவட்டச் செயலாளராக இருந்த திருமாவளவன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குரு ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ராமதாஸ் மீது அதிருப்தியில் இருக்கும் குருவின் மகன் கனலரசன் தற்போது கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது,  

காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை தங்கள் பக்கம் கொண்டுவந்து, குருவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார் டாக்டர் ராமதாஸ். அப்போதே அரை  மனதுடன்தான் அதில் கலந்து கொண்டார் என்று அப்போதே பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில்  கனலரசன் பா.ம.க.வின் பிடியில் இருந்து விலகிவந்து, புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார் . குருவின் பிறந்த நாள் வரும் பிப்ரவரி 1ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது தனது புதிய கட்சியின் பெயர் குறித்து அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
படிப்பு முடித்துவந்ததும் முழுமையாக கட்சி வேலைகளில் இறங்கி பா.ம.க.வை களத்தில் இருந்தே விரட்டுவோம் என்று கனலரசன் தனது ஆதரவாளர்களிடம் கொல்லி வருவதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!