ரயில் மீது கல்வீசித் தாக்குதல்... பா.ம.க.வினர் அட்டகாசம்..!

By Thiraviaraj RMFirst Published Dec 1, 2020, 10:30 AM IST
Highlights

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பா.ம.க-வினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாரை கண்டித்து பா.ம.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பா.ம.க-வினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாரை கண்டித்து பா.ம.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சில கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பா.ம.க வினர் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

 

அப்போது ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சென்னையின் பல பகுதிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்போரட்டத்தை களைக்க 5000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு வரும் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். சென்னை நகருக்குள்ளும் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் போரட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. 

click me!