அன்புமணி சாமியே சரணம் ஐயப்பா... வைரலாகும் கன்னி சாமியின் புகைப்படம்!

Published : Nov 28, 2018, 03:49 PM IST
அன்புமணி சாமியே சரணம் ஐயப்பா... வைரலாகும் கன்னி சாமியின் புகைப்படம்!

சுருக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முதல் முறையாக மாலை போட்டிருந்த அன்புமணி, இன்று இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முதல் முறையாக மாலை போட்டிருந்த அன்புமணி, இன்று இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருப்பது போன்ற பனியனோடு இருக்கும் புகைப்படம் சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. ஆனாலும், அவர் எப்போது மலைக்குச் செல்ல இருக்கிறார், எப்போது மாலை போட்டார் என்பது போன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் தெரியாத நிலையில், இன்று வெளியான புகைப்படத்தில் அவர், பாமக முன்னாள் MLA கணேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களுடன்  இருமுடி கட்டிக்கொண்டு சபரி மலைக்கு செல்லும் புகைப்படம் பாமகவினரால் பகிரப்பட்டு வருகிறது.

 

இன்று மாலை 4:30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்று அங்கிருந்து சாலைவழியாக காரில் செல்ல இருக்கிறார். நாளை காலை 7:30 மணி தரிசனம் பார்க்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!