பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

By vinoth kumarFirst Published Dec 11, 2020, 6:14 PM IST
Highlights

பெண்கள் வலிமை பெற வேண்டும். ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணியவர பாரதியார் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பெண்கள் வலிமை பெற வேண்டும். ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணியவர பாரதியார் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதியின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் வானவில் கலாச்சார மையம், சர்வதேச பாரதி விழா இன்று 4.30 மணியில் இருந்து இணையவழியில் தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி; ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை... அச்சமில்லை... அச்சமென்பது இல்லையே மற்றும் இனியொரு விதி செய்வோம். அதை எந்நாளும் காத்திடுவோம்; தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாரின் பாடல்களை தமிழில் வாசித்தார்.பின்னர், பாரதியாரை புகழ்ந்து பேச தொடங்கினார்.


* வாரணாசிக்கும் பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது

* துணிச்சலாக செயல்பட்டவர் பாரதியார்

* பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன். 

* வாழ்ந்த 39 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்தவர்

* தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்களாக நினைத்தார்.

* பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணினார். 

* ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர்

* பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார்.

* இளைஞர்கள், பாரதியாரை பார்த்து கற்று கொள்ள வேண்டும். அவரை எவ்வாறு வரையறை செய்வது என்பது சவாலானது. 

* பாரதியார் கனவு கண்ட பெண் உரிமைக்காக போராடுகிறோம். 

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி இருந்தார். சமீபத்தில் லடாக் எல்லையில் ராணுவ வீரர்களிடையே உரையாற்றும் போது கூட பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!